23/12/2018

எந்தவொரு கருத்தியலிலும் சிக்கி கொள்ளாதீர்கள் என்பது சரியே...


ஆனால் மக்களுக்கான கருத்தியல் உருவாக்கத்தில், நீங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

எது? மக்களுக்கான கருத்தியல்.

“இதுவரை மக்களை அடிமைப்படுத்திய அனைத்து கருத்தியலையும் எதிர்க்க வேண்டும், அரசியல் நாகரீகம் ரீதியாகவோ அல்லது நட்பு ரீதியாகவோ ஒருபோதும் எந்தவித அடிமை கருத்தியலையும், எந்த சூழ்நிலையிலேயும் ஆதரிக்க கூடாது”

இதை நீங்கள் தற்போதைய நடைமுறை அரசியலில் ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.

பிறகு எப்படி? சாத்தியம் என்கிறீர்களா.

ஒரு படத்தில் ஒரு வசனம் வரும்,

“ஒரு இனத்தின் விடுதலை என்பதின் முழுவதும் வெற்றி என்பது சாத்தியமில்லை”

ஆனால் முழுவதும் வெற்றி அடைவதற்கான சாத்தியக்கூறுகள் இங்கு அதிகம் இருக்கின்றன.

இனம் என்பது மனித இனத்தை கூறினேன்.

இத்தகைய வலிமைமிகுந்த அடிமை கட்டமைப்பை கட்டமைக்க, குறைந்தது 150 வருடங்களாவது ஆகி இருக்கும்..

அதை தகர்க்க ஒரு 50 ஆண்டுகள் ஆகாதா?

உடனடி மாற்றம் என்பது இங்கு சாத்தியமே இல்லை.

நீங்கள் செல்கின்ற பாதையில் தெளிவாக செல்லுங்கள்..

எந்த கருத்தியல் பாதை, நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும்..

பதிலை வைத்திருக்கிறதோ, அதன் மீது நம்பிக்கை வைத்து பயணத்தை தொடருங்கள் வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.