09/02/2019

கொல்கத்தா போலீஸ் கமிஷனரை விசாரிக்க தேதி குறித்த சி.பி.ஐ...


சிட்பண்ட் மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் நாளை மறுநாள் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாரதா மற்றும் ரோஸ் வேலி சிட் பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர்  ராஜீவ் குமாரை விசாரணை செய்வதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அம்மாநில போலீசார் சி.பி.ஐ. அதிகாரிகளை தடுத்து நிறுத்தியதுடன், சில அதிகாரிகளை விசாரணைக்காக போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் அறிந்ததும் மேற்கு வங்க முதல்வர் உடனடியாக அங்கு சென்றார். மேலும், சி.பி.ஐ. அதிகாரிகளை தடுத்த போலீஸ் அதிகாரிகளையும் பாராட்டினார். அதனை தொடர்ந்து சி.பி.ஐ., மத்திய அரசை கண்டித்தும், அரசியலமைப்பை காக்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து சி.பி.ஐ. உச்ச நீதிமன்றத்தை நாடியது. இதனையடுத்து நீதிமன்றம் ராஜீவ் குமார் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக வேண்டும். சில்லாங்கில் உள்ள சி.பி.ஐ. அலுவலத்தில் விசாரணை நடத்த வேண்டும். ராஜீவ் குமாரை சி.பி.ஐ. கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், நாளை மறுநாள் (பிப்.9ம் தேதி) சில்லாங்கில்  விசாரணை ராஜீவ் குமாரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ராஜீவ் குமாரிடம் விசாரண செய்வதற்காக 5 பேர் கொண்ட குழு கேள்விகளை தயார் செய்துள்ளதாகவும் செய்தி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.