09/02/2019

சென்னை புளியந்தோப்பில் குடிசைவாசிகள் அகற்றம்...


சென்னையின் பாரம்பரியங்களில் ஒன்று மெட்ராஸ் புளியந்தோப்பு. 1920 களில் புகழ்பெற்ற பி அன்டு சி மில் கலவரத்தில் சாதி இந்துக்களால் கொளுத்தப்பட்ட குடிசைகளின் தொடர்ச்சியாய் இன்றும் வாழ்ந்து வரும் மக்கள். சூதுவாதின்றி சென்னையின் புறம்போக்கு நிலங்களை தென்மாவட்டத்துக் காரர்களிடமும் வடநாட்டவர்களிடமும் இழந்து நிற்கும் அப்பாவிகள்.

இன்று காலை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி போலிஸ் துணையோடு குடிசைகளை இடித்து அகற்றி மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டார்கள். சேதி தெரிந்து இப்போது தான் அந்தப்பக்கம் போனேன் எல்லாம் முடிந்திருந்தது. சாலையில் பொருள்களோடு மக்கள் யாருக்கோ காத்திருக்கிறார்கள்.

மதியம் எழுச்சித் தலைவர் டாக்டர்.திருமா அவர்கள் வந்து மக்களைப் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டுப் போனார். மாற்று ஏற்பாடுகள் குறித்து அரசிடம் பேசினார் என்று மக்கள் சொன்னார்கள்.

ஆனால், கருணையற்ற சாதி வெறிபிடித்த அரசுகளிடம் தொடர்ந்து சிக்கிக் கொண்டவர்களில் இந்த மெட்ராஸ் குடிசைவாசிகளே தொடர்ந்து முன்னணியில் இருக்கிறார்கள். தமக்கான அரசை தேர்ந்தெடுக்கத் தெரியாதவர்கள் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும் என்பதற்கு இம்மக்களும் ஒரு சாட்சி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.