11/03/2019

இயற்கைக்கு மாறாக ஒரு மிகப்பெரிய செயற்கை கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு இயற்கையின் ஒழுங்கை நன்கு புரிந்தவனாக இருக்க வேண்டும்....


அப்படி புரிந்தவன் வணிகம் என்னும் செயற்கை கட்டமைப்பை உருவாக்க இயற்கையை கணக்கிட்டு, செயற்கையாக செய்யும் விடயத்தை சமநிலைப்படுத்தினால் தான் செயற்கையாக உருவாக்கப்படும் கட்டமைப்பு சீராக நடைபெறும் இல்லையென்றால் இயற்கையால் அழிக்கப்படும்.

நீ விவசாயம் செய்தாலும் சரி, வீடு காட்டினாலும் சரி, வணிகம் செய்தாலும் சரி, குடியாட்சி  செய்தாலும் சரி, முடியாட்சி செய்தாலும் சரி அதற்கான சமநிலை செய்தால் தான் உன் கட்டமைப்பு இங்கு நிலைத்து நிற்கும். (எடுத்துக்காட்டு விவசாயம் பன்ணுன ஒன்னு எல்லை அமைச்சி பலி கொடுத்து தெய்வத்தையோ,தேவதையே அல்லது பேய்யையோ காவல் வைக்கணும் ( இவையெல்லாம் ஆற்றல் அடிப்படை) இல்லை  கோவில் கட்டி கும்பாவிஷேகம் பண்ணனும் மற்றும் காளையை ஓட விட்டு சல்லிக்கட்டணும் இல்ல பனையை எல்லையா  அமைக்கணும் etc ).

இந்த வணிக போட்டியில் நிச்சயமாக யாரும் யாரின் மீதும் குற்றம் சுமத்த முடியாது ஏனெனில் ஒருத்தனுக்கு ஒருத்தன் கூட்டு களவாணிதான், அவனை மறைக்கத்தான் என்னை காட்டி மடை மாற்றுகிறார்கள் என்றெல்லாம் சொல்லவே முடியாது ஏனென்றால் அந்த வணிகத்திலிருந்து நீ முற்றிலும் விலகி எதிர்த்தால் தான் அது உண்மை, இல்லை அதையே நானும் செய்து அந்த வணிகத்தில் அவனைவிட நான் பெரியாளாக வந்து அவனை வீழ்த்துவேன் என்பதெல்லாம் வெறும் வேசம் ஆக மொத்தத்தில் நீ வணிகம் என்னும் சுழற்சியை வலுப்படுத்தவே செய்கிறாய்.

இப்ப நாம கேட்க வேண்டிய கேள்வி யாரு வணிகத்தில் கோலோச்சிக்கிறார்கள் என்பதல்ல,  மாறி மாறி ஏன் வணிகம் என்னும் சுழற்சியை ஏன் விடாமல் வலுப்படுத்துறீங்க?

அது மக்களை ஆளுவதற்கு என்று சொன்னால் அப்பட்டமான பொய், இந்த சுழற்சியின் மூலம் மனிதனிடம் ஓன்று எடுக்கப்படுகிறது அது தெய்வத்துக்கோ, தேவதைக்கோ, பேய்க்கோ, தேவனுக்கோ, அரகனுக்கோ அல்லது etc பயன்படுகிறது. இதை இவன் தொடர்ந்து செய்வதனால் நாம் உண்மையாக பிறந்த பிறப்பு முடியாமல் வலுக்கட்டயமாக இங்கயே சுத்தவைக்கபடுகிறோம்.

வணிகம இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் சரி நீ தெய்வத்தின் மூலமாகவோ தேவதை மூலமாவோ சாதிச்சிகிற, வாழும் பொது கூலிக்கா,பணத்துக்காக வேலை செய்ற
நீ செத்துக்கு அப்பறம் தெய்வமாவோ அல்லது தேவதையாகவோ, பேய்யகவோ ஆகி ரத்தத்திற்க்கும்,பூசைக்கும், நினைவுக்காகவும் வேலை செய்ற ஆக மொத்தமா நீ உடல் கொண்டு இருக்கும் போதும் அடிமையா இருக்குற செத்த அப்பறமும் அடிமையா இருக்க,

நீ பொறந்த பொறப்ப கடைசி வரை ஏன் எதுக்குன்னு தெரியாம இங்க கிடந்து இந்த சுழற்சில கிடந்து சுத்தப்போற

இது இயற்கை சுழற்சின்னு மட்டும் சொல்லிறாத இது முழுக்க முழுக்க செயற்கை சுழற்சி, இயற்கை சுழற்சிக்கிறது வேறு....

தொடரும்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.