11/03/2019

கரியாப்பட்டினம்: அதிமுக உத்தரவின் பேரில் காவல்துறை செய்யும் அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்...


நாகை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து காத்திருப்புப் போராட்டம் 7 நாட்களைக் கடந்த நிலையில் , நேற்று 9 .3. 2019 நள்ளிரவு, அடாவடியாகப் போராட்டப் பந்தல்களை காவல்துறை சிதைத்தது. போராட்ட முன்னிலையாளர்கள் 9 பேரை நள்ளிரவே கைது செய்து, எவரும் அறியா இடத்தில் காவல்துறை கொண்டு வைத்தது. திரு. மிலிட்டரி கோவிந்தராஜ் , அகிலன், சரவணமுத்து, பாலசுப்பிரமணியன், ரமேஷ் மற்றும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை 500 பேருக்குக் குறையாமல் கரியாபட்டினத்தில் குவிக்கப்பட்டிருக்கிறது. போராட்டம் நடத்த இடம் கொடுத்த தோழர் கைது கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டார .் ஆனால் விடியற்காலை அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். நள்ளிரவில் செய்தி அறிந்ததும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர்களுக்கு தகவல் தரப்பட்டது. வேதாரண்யம் வழக்கறிஞர்கள் இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் மயிலாடுதுறை சட்ட ஆலோசகர் உள்ளிட்ட மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் குழு வேதாரண்யம் விரைந்துள்ளது. இன்று 12 மணி அளவில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட இருப்பதாக அறிகிறோம்.  அறப்போர் நடத்தும் மக்களிடம் அத்துமீறும் காவல்துறையின் அக்கிரமமான சட்ட விரோதப் போக்கை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.

- பேராசிரியர் த.செயராமன், தலைமை ஒருங்கிணைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு, தமிழ்நாடு, 10.03.2019...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.