22/04/2017

ஆகாயத்தில் ஒரு ஒளி - 30...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் காணும் தீர்க்க தரிசனம் 30-ம் பகுதியாகும். அதாவது 30-வது தீர்க்க தரிசனம் ஆகும்.

உலக வரலாற்றில் இறைவனின் அற்புதம் நிறைந்த ஒரு பகுதி எதுவென்றால் அது இந்திய தேசமே என்று இந்த 30-ம் தீர்க்க தரிசனம் தெரிவிக்கின்றது. இதுவரை எல்லைப் பிரச்சனைகளை கண்ணுற்று வந்த நமது இந்திய அரசு அதற்கான நிரந்தர தீர்வை திடீரென்று எடுக்க உள்ளது. இந்த முடிவானது சில நாடுகளுக்கு பாதகமாக காணப்பட்டாலும், அது இந்திய தேசத்தைப் பொறுத்தவரை சரியான ஒரு முடிவாக இருக்கும் என 30-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

கடல் தாண்டிய எல்லைப் பிரச்சினைகளிலும் இந்திய தேசம் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் அளவிற்கு இந்திய அரசு தனது கடமைகளை முழுவீச்சில் செய்ய ஆரம்பிக்கும் என்றும், அச்சமயத்தில் சீனாவின் அத்துமீறல் செயல்கள் தலைவிரித்தாடும் என்றும், இச்சமயத்தில் இறைவனின் அற்புதமான செயல் ஒன்றால் சீனா தனது எல்லை தாண்டும் பிரச்சனையிலிருந்து பின்வாங்கும் என்றும், இது யாருமே எதிர்பாராத ஒரு அதிசயமாக நிகழ உள்ளதாக 30-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை இங்கு வெளிப்படுத்துகின்றது.


30-ம் தீர்க்க தரிசனத்தின்படி இந்திய எல்லை பிரச்சனைகளுக்கான தீர்வை இந்திய அரசு துரிதமாக முடிவெடுக்கும் என்றும், இதனால் மக்களிடையே நிம்மதியும், பாதுகாப்புதிறனும் மேலோங்கும் என்று அது மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

இந்திய தேசத்தின் வடமாநில எல்லைகளில் நிலவும் தீவிரவாத எதிர்ப்புகள் அனைத்தும் ஓய்வு நிலைக்கு திரும்பும் என்றும், அதற்கு காரணம் இயற்கையின் கோர தாண்டவத்தால் அவர்களால் நிலைகொள்ள முடியாமல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் சூழல் உருவாகும் என்றும், இதுவே 30-ம் தீர்க்க தரிசனம் நடைபெறுவதற்காண முன் அடையாளங்கள் என்று 30-ம் தீர்க்க தரிசனம் மேலும் சில விளக்கங்களை தருகிறது.

காத்மண்டு நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய இடம் என்றும், அங்குள்ள பிரசித்திப் பெற்ற சிவாலயத்தில் மாபெரும் அதிசயம் ஒன்று நடைபெறும் என்றும், இது இந்திய-நேபாள் உறவுக்கு மிகப்பெரிய பாலமாக அமைய உள்ளதாக 30-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

புத்த மடாலயம் ஒன்றில் மிகப்பெரிய அழிவுச்சம்பவம் ஒன்று நடைபெறும் என்றும், இது கடவுளின் விதிக்கு உட்பட்ட செயலாக நடந்து முடியும் என்றும்,  இதனை யாராலும் தடுக்க முடியாது என்றும், இதுவே அந்நாட்டு மக்களுக்கு இது போதாத காலமாக அமைய உள்ளதற்கான முக்கிய காரணமாக (அறிகுறி) இருக்கும் என்று 30-ம் தீர்க்க தரிசனம் மிக அருகில் நடக்கும் நிகழ்வைப்பற்றி குறிப்பை தருகின்றது.


தென் கைலாயத்திலிருந்து ஒரு அதிசயம் நிகழ உள்ளதாகவும் இந்திய தேசம் இதனால் இறையாண்மையில் ஒருபடி மேலோங்கி நிற்கும் என்றும் 30-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

வடசென்னை, மயிலாப்பூர், சென்ட்ரல், மூவேந்தர் நினைவிடம், கத்திப்பாரா, மத்திய சென்னை, மகாபலிபுரம், தண்டையார் பேட்டை, முள்ளுக்குறிச்சி, வட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அமராவதி, புன்னை நல்லூர், சீர்காழி இவைகள் மக்கள் நினைவில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு சில சம்பவங்களும், அரிய நிகழ்வுகளும் நடக்கும் என 30-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய நிகழ்வைப்பற்றி மறைமுகமாக தெரிவிக்கின்றது.

கிழக்கிலிருந்து வடக்கு நோக்கி, தெற்கிலிருந்து தென்கிழக்கு நோக்கி இச்சம்பவங்கள் நிகழும் என்று 30-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

தமிழகத்தில் உள்ள சில ஆன்மீக அமைப்புகளுக்கு இது போதாத காலம் என்றும், இது இறைவன் எடுத்த முடிவாக இருக்கும் என்றும் இதனால் ஆன்மீக உலகில் திடீரென்று சில மறுமலர்ச்சிகள் உருவாகிட சூழ்நிலைகள் உருவாகும் என்று 30-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.


காலத்தின் சூழலை மாற்றியமைக்கும் பணிகள் யாவும் இந்திய தேசத்தின் மையப்பகுதியிலிருந்து உருவாகும் என்றும், இது இறைவனின் அற்புதத்திற்கு ஒரு சான்றாக அமைய உள்ளதாக 30-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

புனிதர் ஒருவரின் வருகை இந்திய தேசத்தில் நடக்க உள்ளதாகவும், இந்த நிகழ்வு 30-ம் தீர்க்க தரிசனம் நிகழ்விற்கு முன் நிகழும் ஒரு அரிய நிகழ்வாக இருக்கும் என்று 30-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது.

உண்மைகள் ஒருபோதும் உறங்குவதில்லை அவைகள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விழிப்போடு காத்துள்ளன என்று 30-ம் தீர்க்க தரிசனம் தீர்க்க தரிசனத்தின் முக்கியத்துவத்தை இங்கு நமக்கு சுட்டிக் காட்டுகின்றது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.