22/04/2017

வெட்கித்தலை குனிய வேண்டும் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம்...


அமெரிக்காவின் பஹாமாஸ் தீவில் நாளை நடக்க இருக்கிற உலக தடகள போட்டியில் முதல் முறையாக கலந்து கொள்ளும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது.

இந்தியா சார்பில் ஆறு வீரர்கள், ஆறு வீராங்கனைகள், இரண்டு பயிற்சியாளர்கள் உள்பட 15 பேர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் யாருமே இன்று வரை செல்லவில்லை.

என்ன காரணம் தெரியுமா?

இந்திய தடகள சங்கம் அமெரிக்க தூதரகத்தை விசாவுக்காக அணுகியது கடந்தவாரம் சனிக்கிழமைதான். ஒருவாரத்திற்குள் விசா தரமுடியாது என்று அமெரிக்க தூதரகம் கைவிரித்து விட்டது. அமெரிக்க விசா ஒரு வாரத்திற்குள் கிடைக்காது என்ற அடிப்படை அறிவு கூட நம் இந்திய தடகள சங்கத்திற்கு இல்லை.

போட்டிக்கு அனுப்பப்பட்டு தோற்றுப் போனால் ஏற்றுக் கொள்ளலாம்..

போட்டிக்கே அனுப்பபடாமல் தோற்றுப் போவதை என்னவென்று சொல்ல?

இது தான்  இவர்கள் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கும் முக்கியத்துவம் பிராமண கார்ப்பரேட் கம்பெனிகளின் விளையாட்டான கிரிக்கெட்க்கு கொடுக்கும் முக்கியத்துவம் மற்ற எந்த விளையாட்டு போட்டிகளுக்கும் கொடுக்கபடுவதில்லை என்பதே உண்மை..

இந்த லச்சனத்தில் இந்தியா  ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கும் என்பதெல்லாம் கானல் நீர் மட்டுமே இதற்கு  இந்திய விளையாட்டு துறையின் செயற்பாடே சாட்சி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.