04/05/2017

ஆகாயத்தில் ஒரு ஒளி - 56...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் தெரிந்து கொள்ளும் பகுதி 56-ம் தீர்க்க தரிசனப் பகுதியாகும். 56-ம் தீர்க்க தரிசனம் விண்வெளி இரகசியங்களைப் பற்றி எடுத்துக் கூறுகிறது.

56-ம் தீர்க்க தரிசனம் கூறும் விளக்கத்தை இங்கு நாம் காண்போம். அண்டம் என்கிற இந்த பிரபஞ்சம் பல அடுக்குகளைக் கொண்டது என்றும், இந்த அடுக்குகள் ஒவ்வொன்றும் சுற்று வட்டமாக சம அளவில் பிணைக்கப்பட்டுள்ளது என்றும், இது 36 கட்டங்களை கொண்ட பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன என்று 56-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை இங்கு தருகின்றது.

36 அடுக்குகளை கொண்ட இந்த மகாபிரபஞ்சத்தை மனிதஇனம் இன்றும் எட்டவில்லை என்றும், 3-ம் நிலை அடுக்குகளின் சுற்றுவட்டப் பாதையில் மட்டுமே மனித கண்டு பிடிப்புகள் நுழைந்து உள்ளன என்று 56-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


மனித விஞ்ஞானம் தன்னைப் போன்ற மனித உயிரினங்கள் (வேற்றுகிரக வாசிகள்) மற்ற கிரகங்களில் உள்ளார்களா? என்ற ஆய்வினை செய்து வருகிறார்கள் என்றும், அவர்கள் (வேற்றுகிரக வாசிகள்) கோள்களின் அடுக்குகளின் மத்தியில் மட்டுமே வாழ்கிறார்கள் என்றும் 56-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

சந்திரனில் பனிப்புயல், சூரியனில் காந்தப்புயல் என்று விஞ்ஞானம் தமது கண்டறிதல் விஷயங்களை மக்களுக்கு தெரிவிப்பது போல, வேற்றுகிரகத்தில் வாழ்பவர்களால் இன்று வரை பூமியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்துகொள்ளும் விஞ்ஞான வளர்ச்சியில் அவர்கள் உள்ளனர் என்று 56-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தெரிவிக்கின்றது.


மோசமான வான் நிலைகள் இனி உருவாகிடும் என்றும், அதற்கான காரணங்கள் வளிமண்டல அடுக்குகளில் இனி நிகழும் என்றும், பூமியை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேற்றுகிரக வாசிகள் பூமியை நோக்கி வர தங்களை தயார்படுத்தி வருகின்றனர் என்று 56-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது. 3748341/3 HRTS 12329OMEZ என்ற நுட்ப எண்கள் அவர்களின் சமிக்கைகள் என்று 56-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

காலத்தால் அளவிட முடியாத வானியல் கோட்பாடுகளை மனிதகுலம் அறிய முற்படுவது வரவேற்கதக்கது என்றும், ஆனால் அனைத்துமே விஞ்ஞானத்தால் முடியாது என்றும், அவைகள் மெய் ஞானத்தை சார்ந்து வந்தால் மட்டுமே அது முழுமை பெறும் என்று 56-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது. இவ்வுலகத்தில் கண்டறிந்த அனைத்து புதிர்களுமே மனித மனமே கண்டறிந்து உள்ளது என்றும், அதற்கான வழிகளை மனித அறிவு அவர்களுக்கு உதவி உள்ளது என்று 56-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


ஜெட் வடிவ வான் ஊர்தி ஒன்று இந்திய வான் எல்லையில் இனி அடிக்கடி தென்படும் என்றும், இது வேற்று உலகவாசிகளின் மேற்பார்வையாக இருக்கும் என்று 56-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

வான் மண்டலத்தில் மிதந்து கொண்டு உள்ள செயற்கை கோள்களின் இயக்கத்தினை தனது கட்டுபாட்டுக்குள் கொண்டுவர அயல்கிரவாசிகள் முயற்சிக்கும் ஒரு சம்பவம் திடீர் என்று நடக்கும் என்றும், அப்பொழுது அதன் இயக்கத்தோடு தொடர்புடைய சாதனங்கள் யாவும் சில மணித்துளிகள் தமது கட்டுபாட்டை இழக்கும் என்று 56-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

கேரள மாநிலத்திலிருந்து ஒரு நபர் வேற்றுகிரக வாசிகளின் வருகையைப் பற்றி செய்தி பற்றி ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பார் என்றும், அச்சமயத்தில் அங்கு ஒரு வினோதச் சம்பவம் ஒன்று நடைபெற உள்ளதாக மற்றொரு குறிப்பு 56-ம் தீர்க்க தரிசனத்தில் கூறப்பட்டுள்ளது.

காய்தேமில்லத் மாவட்டத்தில் ஒரு வினோத வழிபாடு சம்பவம் துவங்கும் என்றும், இதற்கு அங்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு ஏற்படும் என்றும், அதனை கூர்ந்து கவனித்தால் ஒருவர் வான் மண்டலத்திலிருந்து பூமிக்கு வருவார் என்றும், அவருக்கான வழிபாடு தற்போது நடைபெற்று வருவதாக மக்கள் பேசிக் கொள்ளும் சம்பவம் ஒன்று நிகழும் என்று 56-ம் தீர்க்க தரிசனம் ஒரு வினோத குறிப்பை தருகின்றது.

மேற்கண்ட சம்பவம் வான்மண்டல வாசிகளுக்கு தொடர்புடைய ஒரு செயலாக இருக்கும் என்று கேள்விபட்டு வெளிநாட்டு ஆய்வாளர்கள் தமிழகத்திற்கு வரும் ஒரு சூழ்நிலைக்கு இச்சம்பவம் முன்னோடியாக அமையப் போகிறது என்று 56-ம் தீர்க்க தரிசனம் மேலும் விளக்கத்தை தருகின்றது.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.