04/05/2017

பயங்கரமான அணு ஆயுதங்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு கப்பலில் அனுப்பும் வட கொரியா...


உலகில் நடக்கும் பல்வேறு விஷயங்களை பற்றி ஆராய்ச்சி செய்யும் ஆஸ்திரேலியாவின் திங் டேங் நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி குறிப்பில், வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை கப்பலில் கடத்துகிறது.

அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை சார்ந்தே வட கொரியாவுக்கு அமெரிக்காவை தாக்கும் திறன் உள்ளதா தங்களால் இது முடியும் என காட்ட தான் வட கொரியா சீனா வழியாக மீன் பிடி கப்பல் மற்றும் நீர் மூழ்கி கப்பல் மூலம் அணு ஆயுதங்களை கடத்தி உலக நாடுகளுக்கு எடுத்து செல்வதாக அதில் கூறப்பட்டுள்ளது.

கப்பலின் கண்டெயினர்களில் அணு ஆயுதங்கள் கடத்தபடுவதாகவும், கப்பல் அதிகாரிகளுக்கு லஞ்சம் தரப்படுவதால் அதை அவர்கள் அனுமதிக்கிறார்கள்.

வட கொரியாவிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு அணு ஆயுதங்களை கடத்தி சென்று அதை அங்கு வெடிக்க செய்வதாக பயமுறுத்தினால், தங்களை தாக்க நினைக்கும் அமெரிக்கா அதிலிருந்து பின் வாங்கும் என வட கொரியா நினைக்கிறது.

உலகம் முழுவதும் 1.70 கோடி கண்டெய்னர்கள் கப்பல்களில் உலா வருவதால் அணு ஆயுதங்கள் உள்ள கண்டெய்னர்களை கண்டுபிடிப்பது கடினம் என்பதை உணர்ந்தே வட கொரியா இதை செய்வதாக திங் டேங் அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

வட கொரியாவை குறைத்து மதிப்பிட்டால் மிக பெரிய உயிர் இழப்புகளும், பொருளாதார இழப்புகளையும் உலகம் சந்திக்ககூடும் எனவும் திங் டேங் எச்சரித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.