04/05/2017

பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...


2005-ம் ஆண்டு குஜராத் மாநில அரசுக்கு சொந்தமான ஜிஎஸ்பிசி இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கண்டு பிடிப்பை நடத்தியுள்ளதாக அவர் அறிவித்தார்.

ஆந்திராவின் கடற்கரை பகுதியில் $5,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான 20 லட்சம் கோடி கன மீட்டர் வாயு கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அதே பகுதியில் ரிலையன்சின் கட்டுப்பாட்டில் இருப்பதை விட இது 40% அதிகம்.

எகிப்து, ஏமன், ஆஸ்திரேலியா போன்ற இடங்களிலும் அகழ்வு பணிகளை கைப்பற்றுமாறு மோடி ஜிஎஸ்பிசியை ஊக்குவித்தார்.

மோடியின் அறிவிப்பு வெத்து வேட்டு என்று பலர் சந்தேகித்தார்கள்.

ஆனால் போதுமான தடயங்கள் இல்லாமல் அப்படி சொல்ல முடியாமல் இருந்தது.

2012-ம் ஆண்டில் எரிசக்தி கண்டு பிடிப்புகளை சரி பார்த்து, உறுதி செய்யும் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன்களுக்கான இயக்குனரகம், மோடி அறிவித்ததில் 10% மட்டுமே உண்மை, அதாவது 2 லட்சம் கோடி கன மீட்டர் வாயு மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டது என்றும் அதுவும் அகழ்ந்து எடுப்பதற்கு சிரமமான பகுதியில் உள்ளது என்றும் முடிவு செய்தது.

இதற்கிடையில் மோடியின் உற்சாகமான தலைமையின் கீழ் ஜிஎஸ்பிசி அகழ்வு நடவடிக்கைகளுக்கு $200 கோடியை செலவிட்டது.

அதில் பெருமளவு 20 லட்சம் கோடி கன மீட்டர் வாயு உள்ளது என்ற அடிப்படையில் வாங்கிய கடன்.

வாயு மறைந்ததும் ஜிஎஸ்பிசியும் திவால் ஆனது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.