08/05/2017

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்திய நீட் தேர்வு...


நீட் தேர்வு , உள்ளாடையை நீக்க சொன்ன தேர்வு அதிகாரிகள், ரெஸ்ட் ரூம் இல்லாததால் ஓரமாக சென்று நீக்கி பெற்றோர்களிடம் கொடுத்த மாணவிகள்...

நீட் தேர்வின் போது தங்கள் பெண் பிள்ளைகளின் உள்ளாடை உள்ளிட்டவைகளை பரிசோதித்து நீக்குமாறு அதிகாரிகள் கூறியதால் பெற்றோர்கள் கோபம்..

கேரள மாநிலம் கன்னூரில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவிகளை தேர்வு அதிகாரிகள் பரிசோதனை செய்துள்ளனர்.

அதில் ஒரு மாணவியை அதிகாரி பரிசோதித்துள்ளார். அப்பொழுது நெஞ்சு பகுதி அருகே மெட்டல் டிடெக்டர் வந்த போது சத்தம் எழுப்பியுள்ளது.

உடனே அதிகாரிகள் மேல் உள்ளாடையை  நீக்குமாறு கூறியுள்ளனர்.

இதனால் அவரது பெற்றோர்கள் கோபம் அடைந்தனர். இதே போன்ற மற்ற மாணவிகளின் சந்தேகப்படும் படியான ஆடைகளை அதிகாரிகள் நீக்குமாறு கூறியுள்ளனர்.

இதனால் அனைத்து பெற்றோர்களும் ஒன்று கூடி அதிகாரிகள் நீக்கிய ஆடைகளை வைத்துக் கொண்டு தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.

பெயர் சொல்ல விரும்பாத அந்த மாணவி கூறுகையில் , எனது மேல் உள்ளாடையில் steel buckle இருந்துள்ளது. அதனால் மெட்டல் டிடெக்டர் சத்தம் எழுப்பியது அதனால் அதிகாரிகள் எனது மேல் உள்ளாடையை நீக்குமாறு கூறினார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பெண் கூறுகையில் , அவர்கள் எனது கீழ் உள்ளாடையையும் நீக்குமாறு கூறினார்கள். அந்த இடத்தில் அதை நீக்குவதற்கு ரெஸ்ட் ரூம் எதுவும் இல்லை. வேறு வழி இன்று ஒரு ஓரமாக சென்று அதை நீக்கி வெளியே நின்ற எனது தாயிடம் கொடுத்தேன் எனத் தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.