14/06/2017

பரதம் தமிழர்களின் கலை இல்லையெனக் கூறும் நயவஞ்சக தெலுங்கு நாயக்க வழிவந்த வந்தேறிகளான திராவிடர் கவனத்திற்கு...


பரதக்கலை தமிழ்ச்சித்தரான பரதச்சித்தரால் உருவாக்கப்பட்ட தமிழர்களின் கலையென ஊக்குவித்தார் தமிழினத் தேசியத்தலைவர் மேதகு. பிரபாகரன்.

ஆரியன் தன் கலையாக மாற்ற முயற்சி நடந்தபோது, அதற்குப் பக்கவாத்தியம் பாடிய திராவிட வேடதாரிகளும் சேர்ந்து அழிக்க முயன்றபோது, ஈழத்திலும் புலம்பெயர்ந்த தேசத்திலும் தமிழர் கலைகளில் ஒன்றான பரதம் புத்துணர்ச்சி பெற்றது.

தேசியத்தலைவர் கலைகளுக்கு முக்கியத்துவம் தருபவர். கலையும் பண்பாடும் இனத்தின் ஓரினத்தின் அடையாளம் என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் "கலை பண்பாட்டுக் கழகம்" சிறப்புற இயங்கிவந்தமை நாமறிந்ததே. தனது பளுவான பணிகளுக்கிடையிலும் நடன, மிருதங்க அரங்கேற்ற நிகழ்வுகளில் கலந்துகொள்வார். இசை நிகழ்வுகள், கிராமியக் கலைகள் என்பவற்றிலும் ஈடுபாடுகொண்டு ஊக்குவிப்பார்.

இதேபோல் தமிழரின் தற்காப்புக் கலைகள் பேணி வளர்க்கப்பட வேண்டும் என்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கராத்தே தற்காப்புக் கலை மிக தாக்கமான முறையில் வன்னியில் வளர்ச்சியுற்றமை நாமறிந்ததே.

கராத்தே சுற்றுப் போட்டிகள், தரப்படுத்தல் போட்டிகள் என்பவற்றில் கலந்துகொண்து அவற்றை ஊக்குவித்த பெருமையும் அவரைச் சாரும்.

பாடசாலைகள் தோறும் 6 ம் வகுப்பிட்குமேல் கராத்தே கற்பிக்கப் பட்டது. தற்காப்புக் கலைகளின் வளர்ச்சிக்காக "தமிழீழ தற்காப்புக்கலை சம்மேளனம்" உருவாக்கப் பட்டிருந்தது. எமது வீரர்கள் சிறிலங்காவில் நடந்த போட்டிகளிலும் முத்திரை பதித்தனர்.

இவ்வாறு பல்வேறுபட்ட துறைகளையும் தாபித்து, வழிப்படுத்தி ஊக்குவித ஒரு பன்முகம்மே பிரபாகரன் முகம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.