14/06/2017

சர்வாதிகாரி ஹிட்லரின் கடைசி நிமிடங்கள்...


உலகத்தையே தன் வசபடுத்த நினைத்தவனின் வாழ்க்கையை வாசித்த போது... ஹிட்லர் மீது மிகப்பெரிய மதிப்பு வந்தது....இப்படியும் ஒரு மனிதனின் முன்னேற்றம் இருக்குமா? என்று என்னை வியக்கவைத்தன...

50லட்சம் யூதர்கள் இறக்க காரணமாக இருந்த கொடுர மிருகம் என்பதாய் நான் வைத்து இருந்த பிம்பம் அந்த புத்தகத்தை வாசிக்கையில் கொஞ்சம் மாறி இருந்தது.. தொழில் துறையிலும் ஜெர்மன் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கு என ஹிட்லரை வாசித்த போது வேறு பார்வை எனக்கு வந்தது நிஜம்...

அதே வேளையில் ஒரு நாளைக்கு 6 ஆயிரத்தில் இருந்து பத்தாயிரம் பேர்வரை யூதர்கள்  இறப்புக்கு காரணமான கொடுங்கோலனை ரசிக்க முடியவில்லை...

உலகில் ஜெர்மன் மட்டுமே உலகை ஆள வேண்டும் என்று இரண்டாம் உலக போரை ஆரம்பித்து வைத்து விட்டு 5 கோடி பேரின் இறப்புக்கு காரணமானவனை ரசிக்க முடியவில்லை....

நான்தான்... நான்தான் என்று இருமாப்புடன் வாழ்ந்த ஒரு சர்வாதிகாரியின் கடைசி நிமிடங்கள்தான் இந்த படம்....

முதல் உலக போரில் ஜெர்மனில் இராணுவ சிப்பாய் இரண்டாம் உலக போரின் போது ஜெர்மன் நாட்டை (பீயூரர்) வழி நடத்துபவர் என்று அழைக்கபட்டார்.... என்றால் அந்த வளர்ச்சியை யோசித்து பாருங்கள்...

இதுவரை இரண்டாம் உலக போரை மையபடுத்தி நிறைய படங்கள் வந்து விட்டன... அதில் ஹிட்லரின் கொடுரத்தை சொல்லி அழுத படங்கள் ஏராளம்.... மிக முக்கியமாக... ஐ சர்வடு கிங் ஆப் இங்கிலாந்து.. படமும் லைப் ஈஸ் பீயூட்டிபுல் படமும், ஸ்பீல்பெர்க்கின் ஷின்டலர்லிஸ்ட் என்று அடுக்கி கொண்டே போகலாம்....

ஒரு நாட்டையே ஆண்டவன் எல்லாவ்ற்றிலும் வெற்றியை ருசித்தவன்... அவனுக்காக தலையை சீவிக்கொண்டு கொத்து கொத்தாக இறக்க கண் எதிரில் தயராக ஒரு கூட்டம்... இப்படி இருந்தால் ஒருவனுக்கு என்ன தோன்றி இருக்கும்? உலகத்தின் பிதா நான் தான் என்ற எண்ணம் தோன்றுவது இயற்கை தானே... அதுதான் ஹிட்லருக்கும் தோன்றியது..

ஆனால் நன்றாக வாழ்ந்தவன் வீழ்வதை ஏனோ மனம் ஏற்றுக்கொள்ள
மறுக்கின்றது... காரணம் அது போல இந்த படத்தை எடுத்து இருக்கின்றார்கள்...

(DOWN FALL -2004 படத்தின் கதை என்ன?

ஒரு சர்வாதிகாரியின் படத்தை எப்படி ஆரம்பிக்க போகின்றார்கள் என்று ரொம்ப ஆர்வமாக இருந்தேன்.. இட்லருக்கு பதுங்கு அறையில் இருக்கும் போது அவர் சொல்வதை குறிப்பெடுத்து அதனை டைப்செய்து கொடுக்க சில பெண்களுக்கு நேர்முக தேர்வு நடப்பதில் தொடங்குகின்றது படம்.... இட்லர் பதுங்கு குழியில் ஜெர்மன்தோல்வி செய்திகள் கேட்பதில் இருந்து... நாலாவது படையணி என்ன செய்து கொண்டு இருக்கின்றது ?என்று கேட்டு கத்துவதில் இருந்து... தோல்வியால் துவண்டு திருமணம் செய்து கொண்டு, புதுமனைவியுடன் தற்கொலை செய்து இறப்பது வரை இந்த படம் பதிவு செய்கின்றது..

எல்லாம் முடிந்து ஜெர்மன் படைகள் ரஷ்ய படைகளிடம் தோல்வியை சந்தித்து முன்னேறி பெர்லினை நோக்கி வந்து கொண்டு இருக்கும் போது பாதள அறையில் உள்ள ரகசிய இடத்தில் இட்லர் வாழ்ந்த சில நாட்களை இந்த படம் மி நுட்பமாய் பதிவு செய்து இருக்கின்றது....

சமகாலத்தில் வாழ்ந்த ஒரு சர்வாதிகாரியின் அந்திமகாலம் எப்படி இருந்து இருக்கும்? அது நம் கண் முன் நிறுத்தி இருக்கின்றார்கள்....

தீவிரவாதி, ஒய்பெர்ஸ் சண்டயில் 40000 குழந்தைகள் கொன்றதில் பங்கு பெற்றவன், எழுத்தாளர், சர்வாதிகாரி, ஓவியன், அரசியல்வாதி, மது பழக்கத்தை விட்டவன்... நான்வெஜ் சாப்பிடாதவன் என்ற பன்முக தன்மை கொண்ட ஹிட்லரின் கடைசி காலத்தை பற்றி அறிய இந்த படத்தை பார்க்கவும்....

வாழ்வில் இந்த படத்தை தவறாமல் பார்கக வேண்டிய படம் இது....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...


Bruno Ganz இட்லராக வாழ்ந்து இருக்கின்றார்...

ஒரு வரலாற்று படத்தை எடுக்க போகின்றோம் என்றால் அதுக்கு நிரம்ப பொறுமையும், ஆராய்ந்து உண்மைகனை தெரிந்து கொள்ள வேண்டும்... பட்ஜெட் இல்லை என்று எந்த சப்பை காரணமும் சொல்லாமல் ஷாட் வைக்க வேண்டும்... எங்கேயும் காம்பரமைஸ் ஆக கூடாது... இந்த படக்குழுவினர் அப்படி ஆகவில்லை...

இந்த படம் முழுவதும் இட்லரின் வரலாற்று பின்னனியை சொல்லவில்லை... ஏதோ காதில் விழுந்த விஷயங்களை வைத்தே இந்த படததை எடுத்து இருக்கின்றார்கள்....

எனென்றால் ரஷ்ய படைகள் நெருங்கிய போது அவர்கள் கைக்கு எந்த ஆதாரமும்
கிடைத்துவிடாமல் இருக்க எல்லாத்தையும் தீயிட்டு கொளுத்த சொன்னவன்...

அந்த நேர்முக தேர்வில் கலந்து கொண்டு இட்லர் முதல் வருகையை ரொம்ப சிம்பிளாக பதிவு செய்தாலும் அந்த பெண்கள் கண்களில் காட்டும் அந்த ஆர்வம் உற்சாகம் வாய்ப்பே இல்லை... அப்படி ஒரு பெரிய சர்வாதிகாரியை, ஜெர்மனியில் வாழ்ந்த பல லட்சகணக்கான நேசிப்பை அந்த கண்களில் உள்ள ஆச்சர்யத்தின் மூலம் காட்சி படுத்தி இருப்பார்கள்...

ஜெர்மனிக்கா போரிட்ட சிறுவர்களுக்கு மேடல் கொடுத்து பதுங்கு குழியில் இருக்கும் போது கூட மெடல் கொடுத்து உற்சாகபடுத்தியவன்... அந்த மெடல் கொடுக்கும் போது அந்த சிறுவர்களின் சந்தோஷத்தை பார்க்க வேண்டுமே..

தளபதிகள் போர் நிலவரத்தை சொல்ல பர பரப்பாய் கேமரா அவர்களோடு கேமரா டிராவல் ஆவது நம்மையும் அந்த கூட்டத்தில் ஒருவனாக உணரவைக்க செய்த முயற்சிகள்

இட்லர் இறக்கும் வரை சிம்ம செப்பனம்தான்....


இட்லருக்கு பயம் வந்த பிறகு அதை காட்டிக்கொள்ளாமல் நடப்பது மிக அற்புதம்... எப்ப வேண்டுமானாலும் பிடிபடலாம்னு இருக்கற நிலையிலும் ஒருத்தனுக்கு தேச துரோகம் பட்டம் கொடுத்து அவனை சாகடிப்பதும் ஜெர்மனி யும் இட்லரை யும் வாழ்த்தி விட்டு சாவதும் அருமையான காட்சி.....

கேமராமேன் Rainer Klausmann யை கோவில் கட்டி கும்பிட வேண்டும்.. பதுங்கு அறை செட்டில் கேமராவை தூக்கி கொண்டு ஓடுவது, நிற்பது நடப்பது என பல செய்கின்றது...எந்த இடத்திலும் பிரேமில் வைத்த லைட் தெரியகூடாது... அதே போல் எல்லா காட்சிகளும் ஹேன்ட்ஹெல்ட் ஷர்ட்டுகள்தான்... பதுங்கு அறையில் டிராலி உபயோகபடுத்தியது போல் எனக்கு நியாபகம் இல்லை...

செட் போட்ட ஆர்ட் டைரக்டர் சம்மா சொல்ல ரொம்ப அற்புதமாக செய்து இருக்கின்றார்....

நிறைய இளைய படைவீரர்கள் இறந்து போய் விட்டார்கள்... பலருக்கு மருத்துவ உதவி இல்லை என்று சொல்லும் போது ரகசிய அறையில் உட்கார்ந்து கொண்டு.. அது அவர்கள் தலையேழுத்து அதற்கு தானே அவர்களை படையில் எடுத்தது என்று வியாகியானம் பேசுவது இட்லரின் சுயநலத்தையும், கடைசி கட்ட திமிரையும் காட்டுகின்றது....

ஜெர்மனிக்கா போரிட்ட சிறுவர்களுக்கு மெடல் தந்து அவர்களை ஊக்கு விப்பதும் அவர்கள் பெருமை அடைவதும் அந்த கால நிகழ்வை அப்பட்டமாக காட்டக்கூடிய காட்சிகள்...

எந்த உதவியும் இல்லாமல் எந்த கம்யூனிகேஷனும் இல்லாமல் பல வீரர்ர்கள் இறந்து போவது... தலமை இல்லாமல் ஒரு சாம்ராஜ்யம் எப்படி எல்லாம் சின்னா பின்னமாகிவிடும் என்பதை மிக அழகாக காட்சி படுத்தி இருக்கின்றார்கள்...

இன்னும் கொஞ்ச நேரத்தில் ரஷ்ய படையிடம் மாட்ட போகின்றோம் என்பது தெரிந்து பதுங்கு மாளிகையில் பெரிய தலைகள் எல்லாம் தண்ணியை போட்டு விட்டு , பெண்களை அரைநிர்வாணமாக ஆடவிட்டு வேடிடிக்கை பார்பதும்... பலர் எதிரிலேயே உடலுறவு வேட்கையை தனித்துக்கொள்வதும் போகின்ற போக்கில் காட்டி இருப்பது அற்புதம்....

இந்த படத்தை எல்லா பள்ளி மாணவர்களுக்கும் போட்டு காட்ட வேண்டும் என்பது என் எண்ணம்.... ஒரு வரலாற்று ஆவணம் இந்த படம்....

இட்லரின் எரிந்து விழும் விஷயத்தை நீங்கள் ரசிக்கலாம், அவர் சாப்பிடும் போது கை ஆடிக்கொண்டே இருக்கும் மேனாரிசத்தை நீங்கள் பார்க்கலாம்... முன் பக்கம் விழும் முடியை கோதி விடுவதை ரசிக்கலாம்...

இறக்கும் முன் எல்லோருக்கும் கை கொடுத்து விட்டு சிலநிமிடங்கள் அந்த மிடுக்கு குறையாமல் பேசுவது அற்புதம்....

இறக்கும் முன் நடக்கும் திருமணத்துக்கு, பயத்தில் முகத்தில் பவுடர் அதிகமாக அடித்து கொண்டு வரும் ஒரு காட்சி வாழ்கை முடிய போகின்றது என்று சலித்து கொள்ள அந்த ஒரு காட்சி போதும்...


இன்னும் சில மணி நேரத்தில் ரஷ்ய படையினர் வந்து விடுவார்கள் என்பதை யார் ஹிட்லரிடம் சொல்வது என்று பயந்து கொண்டு இருக்கும் தளபதிகள்...

அதே போல் எல்லலா இடத்திலும் இருக்கும் அல்லக்கைகள் போல் இட்லர் பக்கத்தில் இருந்ததும் கொடுமை....

கோயபல்ஸ் மனைவி எல்லா குந்தைகளுக்கும் விஷம் கொடுப்பது... ஒருவரை ஒருவர் சுட்டுக்கொள்வது எனவும், கண் முடித்தனமாக இட்லருக்காக உயிரை விட்டவர்களை நினைக்கும் போது எந்த அளவுக்கு ஒரு தலைவனாக தனது பேச்சால் கட்டி போட்டு இருக்கின்றான் என்று நினைக்கும் போது ஆச்சர்யம் மேலோங்கி இருக்கின்றது...

இட்லர் தற்கொலை செய்து கொண்டு இரண்டு நாள் கழித்து கூட பல படைதளபதிகள் தற்கொலை செய்து கொள்வதும், ஜெர்மனிக்காக உயிர்விட்டு விசுவாசத்தை காட்டுவதும் கொடுமை...

இந்த படம் பெஸ்ட் பாரின் பிலிமுக்கான ஆஸ்கார் அவார்டு வாங்கியது...இந்த படம் ஜெர்மன் படம்...

இட்லரோடு சமகாலத்தில் வாழ்ந்த படைதளபதிகள் பதுங்குழியில் இருந்த உதவியாளர்கள் என எல்லோரிடமும் பேசி அவர்கள் தந்த அடிப்படையில் இந்த படம் எடுக்கபட்டது...

இந்த படம் பார்த்த பின்பு இட்லரை ரசிப்பீர்கள்.. அதுதான் இந்த படத்தின் பலம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.