23/08/2017

பாரத ஸ்டேட் வங்கியில் குறைந்தபட்ச தொகையைப் பராமரிக்காதோரின் வங்கிக் கணக்குகளில் இருந்து, அபராதமாக எடுக்கப்பட்ட தொகை ரூ.235 கோடி என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது...


இதன்படி கடந்த ஜூன் 30-ஆம் தேதி வரை 388.74 லட்சம் வங்கிக் கணக்குகளில் இருந்து இத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் உரிமைச் சட்டத்தின் படி பெறப்பட்டுள்ளது.

இவ்வங்யில் ஒரு கோடி ரூபாய்க்கு குறைவாக இருப்பு வைத்துள்ள சேமிப்பு கணக்காளர்களுக்கு வருட வட்டி 4% லிருந்து 3.5%  ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் வருடம் ரூபாய் 4400 கோடி இவ்வங்கிக்கு மிச்சமாகுமாம். சாதாரண மக்களிடம் இப்படி பாய்ந்து பாய்ந்து வசூல் செய்யும் ஸ்டேட் வங்கி 2016-17ல் மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வராக் கடனாக தள்ளுபடி செய்த தொகை ரூபாய் 27000 கோடி.

இதை கண்டித்து தான் வருகின்ற ஆகஸ்ட் 22ம் தேதி 10 லட்சம் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.