23/08/2017

திராவிடமும் - திராவிடத் தலைவர்களின் மறுபக்கமும்...


அண்ணாவின் நாவல்கள் நாடகங்களைப் பற்றி கேட்டால்.

அண்ணாவை விட பல மடங்கு அதிகமாக நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள் எழுதியவர்கள் இருக்கிறார்கள்.

சினிமாவிற்கு வசனம் எழுதுவதும், நாவல் எழுதுவதும் பெரிய சாதனை அல்ல.

அதற்கு எல்லாம் பேரறிஞர் என்ற பட்டம் கொடுப்பது தகாது.

இத்தனைக்கும் அண்ணா எழுதியதில் பலதும் சொந்த சரக்கல்ல – பலவும் தழுவல்கள் தான்.

யேல் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் எல்லாம் கொடுக்கவில்லை – அது வெறும் புரளி.

டூரிஸ்டுகள் போவது போல அண்ணாவும் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து விட்டு வந்திருக்கிறார் – அவ்வளவு தான்.

இது போல பல புரளிகளும் அண்ணாவின் காலகட்டத்தில் சுற்ற விடப்பட்டன.

அவர் படிக்கிற காலத்தில் எழுதிய விடைத்தாள்களை படித்து அதன் ஆழத்தைக் கண்டு ஆச்சரியப் பட்டு கல்லூரியில் எடுத்து தனியாக வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் கூட புரளிகள் உண்டு.

எழுத்தாளர் கல்கி அண்ணாவை தென்னாட்டு பெர்னாட்ஷா என்று புகழ்ந்தது, ஒரு வஞ்சப் புகழ்ச்சியே என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் அண்ணாவின் குட்டை உடைத்திருக்கிறார்.

அண்ணாதுரையின் மனப் பிறழ்வுக்கு ஒரு உதாரணம் கம்பரசம் என்கிற அவரது புத்தகம்.

அந்த புத்தகத்தில் அவர் பனிரெண்டாயிரம் பாடல்கள் கொண்ட கம்பராமாயணத்தில் இருந்து ஒரு முப்பது நாற்பது பாடல்கள் மட்டும் எடுத்து எழுதி கம்பராமாயணம் மொத்தமும் ஆபாசம் என்று நிறுவ முயற்சித்திருக்கிறார்.

இதனால் சிறுமைப்படுவது கம்பன் அல்ல, தெலுங்கர் அண்ணா துரைதான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.