23/08/2017

தமிழ் பேசும் வந்தேறிகளுக்கு ஒரு மடல்...


நண்பர்களுக்கு வணக்கம்..

இணையத்தில் தமிழ் இன நண்பர்களுக்கும், வந்தேறிகளுக்கும் இடையேயான வாக்குவாதங்களைக் காண முடிகிறது.

தமிழ் இனத்தில் பிறந்த நண்பர்களுக்கு..

இந்த மண்னாலும் மொழியாலும் தான் நமக்கு பெருமை..

நாம் பேசும் ஈழ விடுதலைக்கும், வந்தேறிகள் பேசும் ஈழ விடுதலைக்கும் நிறைய வேறு பாடுகள் உண்டு. நாம் பேசுவது நிரந்தர தீர்வு. தமிழ் நாட்டில் திராவிடச் சிக்கல் தீராத வரை, ஈழத்தில் எத்தனை கட்ட போர் நடந்தாலும் , அங்கு தமிழருக்கு விடுதலை கிடைக்காது. இது நாம் கண்ட அனுபவ பாடம்.

அதற்கான அரசியலைத் தான் நாம் முன் நிறுத்தி கொண்டிருக்கிறோம்.

தமிழர் அல்லாத வேற்று இனத் தலைவர்கள் தமிழ் நாட்டை ஆளும் வரை இனப் படு கொலை ஈழத்திலும், மற்ற மாநிலங்களிலும் தொடரும்.

யார் தமிழன்? யார் வேற்று இனம்? என்ற தெளிவு தான் தமிழர்களுக்கு மிக முக்கியம்..

நமது அரசியல், ஈழ விடுதலை போராட்டம் கற்றுக் கொடுத்த பாடத்திலும், தமிழ் நாட்டில் , வேற்று இன தலைமையால் மொழியும், இனமும் அழிக்கப் படுவதை பார்த்தும், உலகில் எல்லா இடங்களிலும் , தமிழன் அடிக்கப் படும் போதும், கொல்லப் படும் போதும், தமிழ் நாடு மட்டும், எந்த சலனமும் இல்லாமல் - சின்ன திரைக்குள்ளும், மது கடைக்குள்ளும், திரை அரங்குகளிலும், அடைந்து கிடக்கும் எம் தமிழ் இனத்தைப் பார்த்து எழுந்த அரசியல்.

தெலுங்கன் தன்னை ஆந்திராவில் தெலுங்கன் என்கிறான்..

மலையாளி - கேரளாவில் தன்னை மலையாளி என்கிறான்..

கன்னடன் தன்னை கர்நாடகாவில் கன்னடன் என்கிறான்..

இவர்கள் அத்தனை பேரும் - தமிழ் நாட்டுக்கு வரும் போது - தன்னை தமிழன் என்கிறார்கள்..

ஆட்சி, அதிகாரம், தொழில் , சினிமா, என எல்லாத் துறைகளிலும் இருந்து கொண்டு, தமிழனை, மொழியை, இனத்தை கரு அறுக்கிறார்களே தவிர - நம் இனத்திற்கும் , மொழிக்கும் எந்த நன்மையும் செய்ய வில்லை. செய்யவும் மாட்டார்கள்.

இந்த புறம் போக்கு வந்தேறிகள், தமிழர்களை அடுத்த மாநிலங்களில் இரண்டாம் தர மக்களாக, அடிமைகளாக நடத்துகிறார்கள்.

வேற்று இனமும், நாடும், தமிழர்களை கொன்று குவிக்கும் போது, குடும்ப அரசியலையும், வியாபார அரசியலையும் தான் பார்ப்பார்கள், பார்த்தார்கள், பார்த்துக்கொண்டே இருக்கின்றார்கள்.

நம் வீட்டு நிர்வாகத்தை நாம் பார்ப்பதற்கும், அடுத்தவன் பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடு தான் இது.

அதனால் தமிழ் நாட்டில் வந்தேறிகள் தாங்கள் பிழைப்பதற்கு திராவிடம் தான் பேசுவார்கள். அது அவர்களுக்கு ஒரு போர்வை. தங்களை காத்துக் கொள்ளும் கருவி.

அதனால் தான் யாரெல்லாம் தமிழ் தேசியம் பேசுகிறார்களோ, அவடர்களின் இனம் கண்டு கொண்டு, அதன் பின் அவர்களைப் பின்செல்வதோ, கருத்துக்க்களை பரப்புவதோ செய்யவும்.

நம் அரசியல் தமிழ் நாட்டில் உள்ள வந்தேர்களிடம் இருந்து தமிழ் இனத்தை மீட்பதோடு, தமிழ் இனத்தில் பிறந்த தமிழ்த் தலைவர்களின் திராவிட மாயைக்குள் இருந்து அவர்களையும், அவர்களோடு உள்ள தமிழ் இனப் பிறப்புக்களை மீட்டு வருவதிலும் இருக்கிறது.

கடினமான அரசியல் நிலைப்பாடு. கடமையாய் செய்து முடிக்க வேண்டிய நிலைப்பாடு. தொடர்ந்து செய்து முடிப்போம். திராவிட சிந்தனை அழிப்போம். தமிழ் இனம் காப்போம்.

தமிழ் நாட்டில் உள்ள மனிதாபிமான வந்தேறி நண்பர்களுக்கு...

(தெலுங்கு நாயக்கர், நாயுடு , சக்கிலியர், ரெட்டியார், கௌடா, நாயர், மற்றும் மார்வாடி......) ஈழ விடுதலைக்கு நீங்கள் காட்டும் ஆதரவிற்கு நன்றிகள்.

எங்களின் தமிழ் இன பிறப்புக்கள் தான் ஈழ நண்பர்கள். அவர்களுக்கு கை உயர்த்தி பேசும் நீங்கள், தமிழ் நாட்டில் தமிழனோ, தமிழ் மொழியோ கொல்லப்படும் போது மௌனம் காப்பது ஏன்?

தமிழ் நாடு, தெலுங்கர்களுக்கும், மலையாளிகளுக்கும், மார்வாடிகளுக்கும் அடிமையாய் இருப்பது உங்களுக்கு தெரியாதா?

இந்த வந்தேறிகளால் எல்லா துறைகளிலும் எங்கள் மொழி , இனம் அழிவது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?

18 மைல் கல்லுக்கு அப்பால் உள்ள ஈழம் , அதன் கொடுமை தெரியும் போது, உங்களோடு உள்ள எங்களின் நிலை தெரியவில்லையா அல்லது தெரியாமல் உள்ளது போல நடிப்பா ?

அல்லது உங்களின் வாழ்விற்கு, பிழைப்பிற்கு கேடு வந்து விடும் என்ற பயமா?

தமிழர் அல்லாத வைகோவை பற்றி ஒரு நண்பர் சொன்னார். அவரின் சேவைக்கு நன்றி. தமிழ் நாட்டில் அவரால் ஈழ அரசியல் மட்டும் தான் பேச முடியும். வேறு என்ன செய்வார்?

அதை விட்டால் அவர் ஒருவர் இருப்பதே மக்கள் மறந்து விடுவார்கள் என்பதை அவரும் அறிவார். அதனால் அவர் பேசிக்கொண்டே இருப்பார். அவர் மூலம் ஏதாவது நல்லது நடந்தால் சரி?

இறுதி கட்டப்போரின் போது இவர் தீ குளித்திருந்தால், மக்கள் இன்னும் சில நுற்றாண்டுகளுக்கு மறக்காமல் இருந்திருப்பார்கள். அனால் அவர் தான் தமிழ் இனத்துக்கு விடுதலை வாங்கித்தர முடியும் என்ற மாயைக்குள் செல்ல நாங்கள் தயாராக இல்லை.

நீங்கள் சொல்லுவதை எல்லாம் நம்ப நாங்கள் ஒன்றும் முட்டாள் தமிழர்கள் அல்ல.. அதனால் உங்கள் ஆதரவை ஈழ விடுதலைக்கு செய்து கொண்டே இருங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.