16/08/2017

இந்தியாவில் இன்னும் நூறாண்டுகள் கழித்து பிள்ளை பெற்றுக் கொள்ள அரசாங்க அனுமதி பெற வேண்டும் என்ற கடுமையான சட்டம் வரும்.. ஆனால் அதற்கு விண்ணப்பித்த தைரியத்தில் ஒரு தம்பதியர் குழந்தை பெற்றுவிடுவார்கள்...


ஆனால் நம் அரசாங்கத்தின் மெத்தன போக்கினால் குழந்தை பிறந்தபின்பே உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள இயலாது நம் நாட்டு அதிபர் தேசத்தின் நலன் கருதி உங்கள் விண்ணப்பத்தை ரத்து செய்துவிட்டார்..

உடனடியாக உங்கள் குழந்தையுடன் அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு வரவும் என செய்தி வரும்.. அப்படியே செல்வார்கள்.. குழந்தையை அங்கு விட்டு விட்டு செல்லும் படி சொல்வார்கள் அவர்களும் அங்குள்ள அதிகாரிகளிடம் வாதிட்டு பார்த்து..

குழந்தையை கொடுத்துவிட்டு தோல்வியுடன் திரும்பிவிடுவார்கள்.. ஒரு வாரம் கழித்து குழந்தையைக் காண ஆசைப்பட்டு மருத்துவமனைக்கு செல்வார்கள்.. ஆனால் குழந்தையைக் காட்ட அதிகாரிகள் மறுப்பார்கள்

ரொம்பவும் கெஞ்சியதை பார்த்து மனமிரங்கி ஒரு அதிகாரி சொல்வார் மன்னிக்கவும் உங்கள் குழந்தையை நீங்கள் இனி எப்போதும் பார்க்க முடியாது அக் குழந்தை நேற்று நள்ளிரவே அழிக்கப்பட்டுவிட்டது என்பார்..

குழந்தையின் தாயார் அலறி மயங்குவார்.. அந்த ஆண் மட்டும் அதிகாரியிடம் கேட்பார் ஏன் என் குழந்தையைக் கொன்றீர்கள்.. இது நம் அதிபரின் உத்தரவு.. அரசால் விண்ணப்பம் மறுக்கப்பட்ட குழந்தைகளை வளர்க்க அரசிடம் நிதி இல்லை.

ஆகவே அவற்றை அழித்திடுங்கள் என நேற்றிரவே அரசாணை வெளியிட்டுவிட்டார் அதுதான் காரணம் என்பார்.

இது ஆசான் சுஜாதா அவர்கள் எழுதிய விஞ்ஞான சிறுகதை.. நிஜமாகிடும் போல வாத்தியாரே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.