16/08/2017

தமிழக தெற்கெல்லை மீட்புக்கு ஆதரவு...


திருவாங்கூர்-கொச்சி அரசில் இருந்த தமிழர் பகுதிகளான தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாத்தங்கரை, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு ஆகிய வட்டங்களை சென்னை மாகாணத்துடன் இணைக்க திருவாங்கூர் தமிழ்நாட்டில் பல தமிழர் அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.

ஆனால் கன்னியாக்குமரி மாவட்டப் பகுதிகளும் செங்கோட்டை நகர் பகுதியும் மட்டுமே தமிழகத்துடன் இணைந்தன.

தமிழர்களின் முக்கியப் பகுதியான தேவிக்குளம், பீர்மேடு திருவாங்கூர்-கொச்சி அரசிலேயே இருந்தது.

இதற்குக் காரணமாக, சிங்களவனை விட கொடூரமான தமிழின பகைவர்களான மலையாளி பணிக்கர் இருந்தார் என தமிழருக்கு ஆதரவாக சட்டமன்றத்திலேயே குற்றம் சாட்டினார் விநாயகம்.

மாநில புணரமைப்புக் கமிசனின் தலைவர் வந்தேறி சர். பசல் அலி பீகாரைச் சார்ந்தவர்.

அவருடைய சொந்த மாநிலமான பீகார் பற்றிய விவாதம் நடைபெற்ற போது அவர் அதில் கலந்து கொள்ளாமல் வெளியேறி விட்டார்.

அவருடைய இந்த நேர்மையான நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன்.

ஆனால் கமிசனின் மற்றொரு உறுப்பினரான கே. எம். பணிக்கரிடம் இத்தகைய நேர்மையில்லை.

தமிழ்நாடு, கேரளம் ஆகியவை பற்றிய பிரச்சினை விவாதிக்கப்படும் போது மலையாளியான அவர் இந்த கமிசன் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கக் கூடாது.

குறிப்பாக தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்க்களை பற்றிய பிரச்சினைகளில் அவர் அளவு கடந்து அக்கரை காட்டி இந்த தாலுக்கா கேரளத்துடனேயே இணைக்க வேண்டும் என்று கமிசனுக்குள்ளேயும், வெளியேயும் வாதாடி வருகிறார்...

—கே. விநாயகம், சட்டமன்றம் 23-11-1955...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.