18/09/2017

வரலாற்றில் சூனியக்காரிகளின் வேட்டை 1...


ஆரம்ப காலகட்டத்தில் தி விச் ஹண்ட் என்று சொல்லக்கூடிய சூனியக்காரிகளை உயிருடன் கொளுத்திய சம்பவங்கள் ஏராளம்..

அக்காலகட்டத்தில் உள்ள மூட நம்பிக்கையின் படி கடலில் ஏற்படும் சீற்றங்களுக்கும் புயலுக்கு சூனியக்காரிகளே காரணம் பல கப்பல்களை கவிழ்த்து மனித காவு வாங்கிக் கொள்கின்றனர் என்று நம்பப்பட்டது..

இதற்கான தீர்வை இன்றைய அயர்லாந்து ஸ்காட்லாண்ட் இங்கிலாந்தும் சேர்ந்த பிரதேசங்களை உள்ளடக்கி ஆட்சி செய்த மன்னரான கிங் ஜேம்ஸ் ஆட்சி காலத்தில் தான் முதன் முதலில் சூனியக்காரர்களை வேட்டையாடும் வழக்கம் ஏற்பட்டது..

இவர்கள் சூனியக்காரர்கள் என்று அறியப்பட்டால் அவர்களின் வீட்டில் ஒரு கருப்பு துணியை கட்டிவிட்டு வந்து விடுவார்கள் அரச பாதுகாப்பு படையினர்.

பொதுவாக அக்காலகட்டத்தில் நம்பக்கூடிய நம்பிக்கை கருப்பு என்பது சாத்தானின் அடையாளம்..

[ஆனால் இந்த சூனியக்காரிகள் என்று சொல்லக்கூடிய பெண்கள் அதை எடுத்து ஆடையாகவே அணிந்து கொள்வார்கள் அவர்களுக்கு பயம் இல்லை]..

பின்னர் அவ்வூர் மக்கள் அந்த கருப்பு துணி கட்டிய வீட்டை ஒதுக்குவார்கள் ஊருக்கு ஒதுக்குபுறமாக அந்த பெண்ணை அப்புறப்படுத்துவார்கள் ..

பின்னால் ஒரு நாளில் அரசாங்க அதிகாரிகள் வந்து உயிருடன் மக்கள் மத்தியில் சூனியக்காரி என்று சொல்லக் கூடிய பெண்ணை  எரித்து விடுவார்கள்..

உண்மையில் சூனியக்காரிகள் என்றால் யார் ?

இவர்களால் எரித்து கொல்லப்பட்ட சூனியக்காரிகள் என்பவர்கள் ஒரு இட்டுக்கட்டப்பட்ட பொய்யான தகவல்..

அவர்கள் உண்மையில் யார் ?

பேசுவோம்.. அதிர்வு தகவலுடன்.. அடுத்த பதிவில் சந்திப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.