18/09/2017

நந்தியாவட்டை மருத்துவக் குணங்கள்...


நந்தியாவட்டை ஒரு செடியினம். இதன் இலைகள் எதிரடுக்கில் அமைந்துள்ள கரும்பச்சை நிறமாகும். இதன் பூக்கள் வெந்நிறமாக  இருக்கும். மலர் பல அடுக்கு இதழ்களையுடைய இனமும் காணப்படுகின்றன. வளமான எல்லா இடங்களிலும் வளரக்கூடியது.  இதன் பிறப்பிடம் வட இந்தியா.

இதை மேற்கு ஆப்பிரிக்காவில் அழகு பூஞ்செடியாக வளர்க்கிறார்கள். இச்செடி 3, 5 அடி உயரத்திற்கு வளரக் கூடியவை.

இவை  முக்கியமாக கண் நோயிக்கான மருந்தாகப் பயன்படுகிறது.

நந்தியாவட்டை வேரை கசாயமிட்டுக் குடிக்க வயிற்றுப் போக்கு,  வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

இதன் பூக்கள் வாசனையூட்டும் பொருளாகப் பயன்படுகின்றது.

இதில் ஒற்றைப் பூ இரட்டைப் பூ என 2 வகை உண்டு. இரண்டும் ஒரே குணமுடையவை.

கண்களில் உண்டான கொதிப்புக்கு  இதை கண்களை மூடிக்கொண்டு மிருதுவாக ஒற்றடம் கொடுத்தால், கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும்.

 இதன் வேரை  மென்று துப்பினால் பல் வலி குணமாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.