18/09/2017

இலுமினாட்டி யூனிலிவர் நிறுவனம்.. நாகரிக அடிமைகளுக்கான பதிவு. நேரம் இருந்தால் படியுங்கள்...


யூனிலிவர். இது பல வருடங்களுக்கு முன்னர் உருவான நிறுவனம். 190 மேற்பட்ட நாடுகளில் வியாபாரம் செய்கிறது. 400-க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் இதற்கு சொந்தம். இது அதிகம் கவனம் செலுத்துவது 13 தயாரிப்புகளில் மட்டுமே.

பல நிறுவனங்கள் இதற்கு கீழ் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இந்தியாவில் உள்ள Hindustan Unilever இதன் துணை நிறுவனம்.

உணவு வகைகளில் இருந்து அழகு சாதனப் பொருட்கள் என பல தயாரிப்புகள் இதனுடையதே.

இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது.

இதன் பிரபலமான தயாரிப்புகள்...

Annapurna salt and spices.

Bru coffeeBrooke Bond (3 Roses, Taj Mahal, Taaza, Red Label) tea.

Kissan squashes, ketchups, juices and jams.

Lipton tea.

Knorr soups & meal makers and soupy noodles.

Kwality Wall's frozen dessert.

Modern Bread, ready to eat chapattis and other bakery items(now sold to Everstone Capital).

Magnum (ice cream).

இவை வெறும் உணவுப் பொருட்களே..

இன்னும் வீட்டு உபயோக பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், என பல உள்ளன..

close up நன்றாக இல்லை என்று pepsodent வாங்கினாலும் சரி, எந்த சோப்பு வாங்கினாலும் இவர்களுக்கு லாபமே.

தமிழ் நாட்டில் கொடைக்கானலில் கண்ணாடி தயாரிப்பதாகக் கூறி அரசிடம் அனுமதி பெற்று பாதரசம் தயாரித்தது இந்த நிறுவனம்.

17 ஆண்டுகளில், 135 டன் பாதரசம் பயன்படுத்தி உள்ளது.

சராசரியாக ஆண்டுக்கு 90 லட்சம் தெர்மா மீட்டர்கள்  தயாரித்துள்ளது. சராசரியாக 20 லட்சம் தெர்மா மீட்டர்கள் உடைந்து வீணாகியுள்ளன.

2000ல் பழனி மலை பாதுகாப்பு குழு  நடத்திய ஆய்வில்தான் பாதரச கழிவால் கொடைக்கானலில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

பின்னர் 289 டன் கண்ணாடி, பாதரசக் கழிவுகள் கப்பல் மூலம் திருப்பி அனுப்பப்பட்டது.

தொழிற்சாலை இயங்கிய 6.5 ஏக்கர் நிலத்திலும் அருகில் உள்ள காப்பு காடுகளிலும் பாதரசம் கலந்துள்ளது.

கொடைக்கானல் நீர்பிடிப்பு பகுதி என்பதால் அலட்சியப்படுத்தாமல் முறையாக சுத்திகரிக்க வேண்டும்.

ஒரு கிலோ மண்ணில் பாதரசத்தின் அளவு 10  மில்லி கிராம் அளவுக்குள் இருப்பது போல் சுத்திகரிக்க நிறுவனம் சம்மதம் தெரிவித்தது.

உலக அளவிலான தரத்தில் கூறுவது என்றால் ஒரு கிலோ  மண்ணில் பாதரசத்தின் அளவு 1 மில்லி கிராம் மட்டுமே இருக்க வேண்டும்.

இந்நிலையில், 10 மில்லி கிராம் என்ற அளவைவிட 25 மில்லி கிராம்  அளவாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிர்ணயித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உங்களை பயன்படுத்த வேண்டாம் என கூறவில்லை. எதைப் பற்றியும் தெரியாமல் இருக்காதீர்கள். தயவு செய்து பாரம்பரியத்தை மறக்காதிர்கள். நம் முன்னோர்கள் இதைப் பயன்படுத்தி வாழவில்லை.

அவர்கள் ஆரோக்கியமாகவே வாழ்ந்தார்கள். ஆனால் இன்று நாம் ஆரோக்கியமாகவே இல்லை. குழந்தைகளுக்கு ஆரோக்கியம் என்ற பெயரில் விஷத்தை வாங்கி தருகிறோம்.

இந்த பதிவால் நாங்கள் பணம் சம்பாதிக்க போவதில்லை. உங்களில் ஒருவர் மாறினாலும் போதும்.

சில மேதைகள் எங்களுக்கு மத சாயம் பூச முயற்சி செய்கிறீர்கள். வாழ்நாள் முழுவதும் ஜால்ரா தட்டி கொண்டே இருங்கள். எங்களை முட்டாள்கள் என்றும், பைத்தியம் என்று நினைத்தாலும் பரவாயில்லை. உலக அரசியல் தெரிந்தால் புரியும்.

எங்களை கோமாளிகள் என்று வைத்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் ஆட்டு மந்தையாக இருக்கு ஆசைப்படாதீர்கள்.

வாழ்நாள் முழுவதும் விளக்கை சுற்றும் விட்டில் பூச்சிகளாக இருக்கு வேண்டாம்.

உலகம் அது இல்லை. நாகரிகத்தின் மேல் ஆவல் கொண்ட முட்டாள்கள் இருக்கும் வரை எதுவும் மாறாதது.

நீ யார் என்று மறந்து விடாதே. எங்களை எவ்வாறு வேண்டுமானாலும் நினைத்து கொள்ளுங்கள். நாங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

இது முதல் பதிவு. இன்னும் பல நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் அடுத்த பதிவில் தருகிறேன். இது ஆரம்பம் மட்டுமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.