18/09/2017

தமிழகமெங்கும் விவசாயிகள் வறட்சி நிதி போராடி கேட்டுக் கொண்டிருக்கும் சூழலில்...


கடன் நெருக்கடியில்  தன் மக்களை வறட்சி நிதி கேட்க வைக்காத பொன்விளையும் பூமி சிவரக்கோட்டை. கால்நடை வளர்ப்பு அம்மக்களின் இன்னுமொரு பிரதான தொழிலாகும்.

குதிரைவாலி, சோளம், கம்பு, வரகு, தினை, கேழ்வரகு, எள்ளு கொள்ளு, பாசிப்பயிறு, துவரை, உளுந்து, மொச்சை, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் விளையும் மானாவாரி பூமி. மக்கள் - இடையர்;  உணவு - சாமை, வரகு; நீர்நிலை - காட்டாறு; விலங்குகள் - மான், முயல், பசு; தொழில் - தவசம் விளைவித்தல், கால்நடை மேய்த்தல் என சங்க இலக்கியம் காட்டும் முல்லை திணையின் கருப்பொருட்கள் இன்றளவும் உயிர்ப்பாக உள்ள தொன்மையான ஊர் சிவரக்கோட்டை தான்.

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை, கரிசல்காளம்பட்டி, சுவாமிமல்லம்பட்டி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 1478.71 ஏக்கர் விவசாய நிலங்களை, தரிசு நிலம் என சொல்லி சிப்காட்டிற்கு (SIPCOT) கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

பல ஆண்டுகளாக அவ்வூர் விவசாயிகளும், பொதுமக்களும் அரசின் இந்த பேரழிப்பு திட்டத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள்.

மீண்டும், மீண்டும் அரசுக்கு இது தரிசு நிலமல்ல, பொன்விளையும் பூமி என உரக்க சொல்ல வருகிற 18.09.2017 திங்கள்கிழமை காலை 11 மணிக்கு சிவரக்கோட்டை பகுதியை பாதுகாக்கப்பட்ட மானாவாரி வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுப்போம். அனைவரும் வருக.

தமிழக அரசே..

கள்ளிக்குடி சிவரக்கோட்டை பகுதியை பாதுகாக்கபட்ட மானாவாரி வேளாண் மண்டலமாக அறிவித்திடு..

சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் விவாசாயிகளை அழிக்காதே.

மதுரை மாவட்ட விவசாயிகள் நலச்சங்கம்
நாணல் நண்பர்கள் இயக்கம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.