13/09/2017

இயற்கை உரம் நிலத்திற்கு அளிக்கப்படும் பொழுது அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை பற்றி ஆராய்வோம்...


இரசாயன உரம் மற்றும் இயற்கை உரத்தின் செயல்பாடுகள்...

இயற்கை உரம் நிலத்திற்கு அளிக்கப்படும் பொழுது அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை பற்றி ஆராய்வோம்..

விலங்கினங்கள், தாவரங்களை உணவாக உட்கொண்டு கழிவாக வெளியேற்றுகிறது.

இந்த விலங்கின கழிவுகள் மற்றும் இறந்த தாவரங்களின் பகுதிகளை சேர்த்து மட்க செய்து இயற்கை உரமாக மாற்றப்படுகிறது.

இந்த கழிவு பொருட்களை மட்க வைக்கும் பொழுது அதிலுள்ள சத்துக்கள் மீண்டும் தாவரங்கள் பயன்படுத்தி கொள்ளும் வகையில் சத்துக்களாக மாற்றப்படுகிறது.

இதனால் இந்த உரங்களை பயன்படுத்தும் தாவரங்கள் நேரடியாக இந்த சத்துக்களை கிரகித்து கொள்ள முடிகிறது.

இவ்வாறு நேரடியாக கிடைக்கக் கூடிய சத்துக்களை காட்டிலும் மறைமுகமாக கிடைக்க கூடிய சத்துக்களின் அளவுதான் அதிகம்.

மறைமுகமாக சத்துக்கள் எங்கிருந்து கிடைக்கிறது, மண்ணிலுள்ள உயிரனங்கள் இச்சத்துக்களை அளிக்கிறது.

தழைச்சத்தை நிலைநிறுத்தக் கூடிய நுண்ணுயிரிகள் ஆகாயத்தில் இருக்கும் நைட்ரஜனை பயிர்கள் எடுக்கக்கூடிய தழைச்சத்தாக மாற்றி பயிருக்கு அளிக்கிறது.

இது போல் பாஸ்போபாக்டீரியா என்ற நுண்ணுயிர் நிலத்திலுள்ள பயிரிகள் எடுத்து கொள்ள முடியாத நிலையிலுள்ள பாஸ்பேட்டாக மாற்றி மணி சத்தாக பயிர்களுக்கு அளிக்கிறது.

இயற்கை உரங்களை நிலத்திற்கு அளிக்கப்படும் போது இந்த நுண்ணுயிரிகள் பெருக தகுந்த சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்கிறது.

அதனால் நுண்ணுயிரிகள் பெருகி இந்த சத்துக்களை எல்லாம் பயிர்களுக்கு கிடைக்க செய்கிறது.

இயற்கை உரத்தில் பொதுவாக 2-2.5 மூ தழைச்சத்து இருக்கும். அதாவது 1 ஏக்கருக்கு ஒரு டன் இயற்கை உரத்தை அளித்தால் 20-25 கிலோ தழைச்சத்து பயிர்களுக்கு கிடைக்கும்.

100 கிலோ இரசாயன உரம் யூரியாவில் 46 கிலோ தழைச்சத்து உள்ளது.

யூரியாவை பயிருக்கு பயன்படுத்தும் போது 16 கிலோ தழைச்சத்து வேதியியல் மாற்றத்தால் சிதைவடைந்தாலும் மீதம் 30 கிலோ தழைச்சத்து பயிருக்கு கிடைக்கும்.

அதனால் 1 டன் இயற்கை உரம் பயன்படுத்துவதை காட்டிலும் 100 கிலோ யூரியா பயன்படுத்துவது சிறந்தது என்று கணக்கு போட வேண்டாம்.

இயற்கை உரம் அளிக்கப்படும் பொழுது நிலத்திலுள்ள நுண்ணுயிரிகள் 100-125 கிலோ தழைச்சத்தை பயிருக்கு கொடுக்க வல்லது.

அவை மட்டுமில்லாமல் இயற்கை உரம் இடுவதினால் அதன் நேரடி பயன்களை விட அதனால் பெருகி வளரும் நுண்ணுயிர்களினால் ஏற்படும் பலன்கள் பல மடங்கு அதிகமாகும்.

இரசாயன உரங்கள் குறிப்பாக யூரியா பயன்படுத்தும் போது செடிகள் விரைவில் பச்சையாக மாறுகிறது.

குறைவான வளர்ச்சி இருக்கிறது.

என்றும் இயற்கை உரங்களை பயன்படுத்தும் போது பயிரின் வளர்ச்சி மெதுவாக இருக்கிறது. என்ற ஒரு கருத்து நிலவுகிறது.

அதில் எது சிறந்தது என்று ஆராய்ந்தால் உண்மை விளங்கும்.

யூரியா பயன்படுத்தும் போது பயிரின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்பது உண்மை ஆனால் செடி ஆரோக்கியமாக இருக்க முடியாது.

நோய் தாக்குதலை தாங்கி வளர கூடியதாக இருக்காது.

இந்த செடிகளை தான் பூச்சிகள் அதிக அளவில் தாக்கும்.

இரசாயன உரம் இட்ட பயிர்களுக்கு தான் பூச்சி கொல்லிகள் அதிகம் பயன்படுத்துவதை காண்கிறோம்.

இதனால் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது சிரமம்.

மற்றும் அதற்காக அதிகமாக செலவிட வேண்டியிருக்கும்.

இயற்கை உரம் இட்ட நிலங்களில் இதன் பாதிப்பு குறைவு. இதை தாங்களே ஆராய்ந்து பார்த்தால் எது சிறப்பு என்று தெளிவாக விளங்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.