27/02/2018

நம்மை பெற்றவர்களை அம்மா அப்பா என ஏன் அழைக்கிறோம்....?


நம்மை பெற்றவர்களை அம்மா அப்பா என ஏன் அழைக்கிறோம். அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு.....?

அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன.....?

அ-உயிரெழுத்து.
ம்-மெய்யெழுத்து .
மா-உயிர் மெய்யெழுத்து.

அதே போல தான் அப்பா.

தன் குழந்தைக்கு தன்னுடைய வித்தாகிய உயிரை கொடுப்பவர் தந்தை.

தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய்.

இந்த உயிரும், மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை.

எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது.

நமது தமிழ் மொழியில் தான் இத்தனை அற்புதங்கள் உள்ளன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.