23/03/2018

விரைவில் 36 பஞ்சாயத்து கிராம விவசாயிகள் சேர்ந்து.. 10,000 விவசாயிகள் பங்குபெறும் மாபெரும் சாலைமறியல்...


மருதையாற்றின் குறுக்கே அணை கட்டி கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரிக்கு நீர் கொண்டு வர கோரி 25 ஆண்டு கால கூக்குரல்..

தொடர் ஏமாற்றம்....

கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரிலும் ஏமாற்றமே..

கடந்த ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி முதல்வர் அவர்களை நேரடியாக சந்தித்து மனுவும் அளிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிலும் முதல்வர் அல்வா கொடுத்து விவசாயிகளை ஏமாற்றி விட்டார்.

இந்த ஆண்டு பட்ஜெட் அறிவிப்பும் அரியலூர் மாவட்ட விவசாயிகளின் மிகப்பெரிய நீர்ப்பிடிப்பு பகுதியான திருமானூர் டெல்டா மக்களின் நீராதாரமான மருதையாற்றின் குறுக்கே அணை கட்டி மழைக்காலங்களில் வரும் உபரி நீரை சுமார் 20 கி.மீ.தூரம் கால்வாய் மூலம் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரிக்கு கொண்டு செல்ல வலியுறுத்தி 25 ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் ஆட்சியாளர்கள் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.....

இடம்...

திருமானூர் தேசிய நெடுஞ்சாலை.
நாள்:- விரைவில் அறிவிக்கப்படும்.

இவண்...
அனைத்து விவசாய சங்கங்கள்.

தொடர்புக்கு: 8220365496..
அகில இந்திய மக்கள் சேவை இயக்க நிறுவனர், தலைவர் தங்க சண்முக சுந்தரம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.