27/03/2018

சர்வம் பிரம்மமயம்...


ஒரு சக்தியின் வேகத்தை கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ அது வேறொரு சக்தியாக மாறி செயல்படும்.

கடவுள் அலை வடிவமானவர். அவரின் வேகம் குறைய குறைய அது வேறொரு சக்தியாகவும், மிகவும் குறையும் போது பௌதீக பொருட்களாகவும் காட்சியளிக்கிறார்.

இதைத்தான் வேதம் *சமுத்ராதர்ணவாததி  சம்வத் சரோ அஜாயத* என கூறுகிறது. அதாவது சப்திக்கும் அலைகடலில் இருந்து சுற்றுவேகம் உருவாகிறது என அர்த்தம்.

*ஸோ அமன்யத* அதாவது கடவுள் நினைத்தார். கடவுள் தன் மனதில் செய்துகொள்ளும் கற்பணைதான் பிரபஞ்சம்.

நமது உறக்கத்தின் போது புலன்கள் ஒடுங்கினாலும் கனவில் நாம் தத்ரூபமாக காணும் காட்சிகள் நம் சித்தத்தில் பதிகின்றன.

கண்விழித்த பின் எப்படி கனவென நினைத்து அதன் உண்மைத் தன்மையை உணர்கிறோமோ அதேபோல் நாம் இறந்தபின் நாம் வாழ்ந்த வாழ்க்கை கனவென்பதை அறிந்து கொள்கிறோம்.

கனவோ நிஜமோ அதில் நடக்கும் சம்பவங்களின் தகவல்கள் நம் சித்தத்தில் பதிந்து மறுபிறவிக்கு வித்திடுகிறது.

ஆம் நாம் நிஜமென நினைத்து வாழும் இந்த வாழ்க்கையும் நம் மனதால் நாம் காணும் கனவே. உறக்கத்தில் இருந்து விழித்தபின் எப்படி உண்மையை உணர்கிறோமோ அதேபோல இறந்த பின்பு இதை உணர்வோம்.

உன் மனதால் சூட்சம ஸ்தூல உலகங்களை உருவாக்கி கற்பணை கனவு காண்கிறாய். எல்லாம் மாயை என்ற கோட்பாடு புரிந்திருக்கும் என நம்புகிறேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.