11/04/2018

ஐன்ஸ்டைனின் நாத்திக விஞ்ஞானம்...


ஒளியின் வேகத்தை மிஞ்சிய எந்தவொன்றும் இந்தப் பிரபஞ்சத்தில் கிடையாது என்பது தான் ஐன்ஸ்டைன் போன்ற விஞ்ஞானிகளது வாதம். ஒளியின் வேகத்தையும் தாண்டிய வேகம் கொண்ட பல அம்சங்கள் இந்தப் பேரண்டத்தில் இருக்கத் தான் செய்கின்றன என்பது தான் உண்மை. ஒளியின் வேகத்தை மிஞ்சிய வேகத்தில் எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன என்ற இந்த உண்மையைக் கூட மெய்ப்பிக்கும் விதமாகவே குவையக் கோட்பாட்டின் கருத்துக்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

நாம் வாழும் இந்தப் பூமி சூரிய குடும்பத்தின் ஓர் அங்கம் என்பது நாம் அறிந்த விடயம். பூமியை விடப் பல்லாயிரம் மடங்கு விசாலமானது இந்த சூரிய குடும்பம். இது போன்ற இன்னும் பத்தாயிரம் கோடி சூரிய குடும்பங்களை உள்ளடக்கியது தான் “பால்வீதி” எனும் நமது காலெக்ஸி (Milky way Galaxy). “பால்வீதி” எனும் நமது காலெக்ஸியைப் போல் இன்னும் இருபதாயிரம் கோடி கலெக்ஸிகள் இந்தப் பிரபஞ்சத்தில் பரவியிருக்கின்றன என்பது தான் சமகால விஞ்ஞானத்தின் அனுமானம்.

இதை வைத்து மட்டும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். எத்தனை கோடானுகோடி ஒளியாண்டுகள் தூரத்துக்கு இந்தப் பிரபஞ்சம் வியாபித்திருக்கின்றது என்பதை நீங்களே உணரலாம்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்வளவு பிரமாண்டமான இந்தப் பிரபஞ்சம் மொத்தமும் முதலாவது வானத்துக்கு (அடிவானத்துக்கு) கீழே தான் இருக்கிறது என்று அனைத்து வேதங்களும் கூறுகிறது.

மேலும், இதையும் தாண்டி இன்னும் ஆறு வானங்கள் நமது கற்பனைக்கே எட்டாத தூரத்தில் இருப்பதாக கூறுகிறது.

அதாவது பல்லாயிரம் கோடி ஒளியாண்டுகள் தூரம் பயணித்துப் பிரபஞ்சத்தின் எல்லையை அடைந்தாலும், அது முதலாவது வானத்தைத் தொட்டதாகக் கூட இருக்காது. கடவுளின் சாம்ராஜ்ஜியத்தின் விசாலம் எத்தகையதென்பதை புரிந்து கொள்வதற்கு இந்த ஓர் உண்மையே போதுமானதாக இருக்கும்.

ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் இதை இன்னும் கொஞ்சம் இலகுவாகப் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.

உதாரணத்துக்கு இன்று நாம் ஓர் அதிவேக விண்கலத்தில் ஏறிப் பிரபஞ்சத்தின் எல்லையை நோக்கி ஒளியின் வேகத்தில் (நொடிக்கு ஏறத்தாழ 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில்) பயணிக்க ஆரம்பிப்பதாக வைத்துக் கொள்வோம். பயணிக்கத் தொடங்கியது முதல், எந்த இடத்திலும் நிறுத்தாமல் நாம் பயனித்துக் கொண்டே இருக்க வேண்டும். நமது ஆயுட்காலம் மொத்தமும் அந்த வின்கலத்துக்குள்ளேயே கழியும் வரை பயனித்தாலும், நம் ஆயுட்காலத்துக்குள் பிரபஞ்சத்தின் எல்லையை அடைய முடியாது.

ஒரு வாதத்துக்கு, நாம் தனியாகப் பயணிக்காமல், குடும்பத்தோடு பயணிப்பதாக நினைத்துக் கொள்வோம். பயணம் செய்து கொண்டே நாம் அந்த வின்கலத்துக்கு உள்ளேயே உண்டு, உறங்கி, இனப்பெருக்கமும் செய்து கொண்டே இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். கொஞ்ச தூரம் போவதற்குள் நமது ஆயுள் முடிந்து நாம் இறந்து விடுவோம். நம்மைத் தொடர்ந்து நமது சந்ததிகள் தலைமுறை தலைமுறையாக இந்தப் பயணத்தை விடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால்... ஒரு தலைமுறையல்ல; இரு தலைமுறைகளல்ல; பல கோடி தலைமுறைகளைத் தாண்டிய நமது சந்ததிகள் தாம் இறுதியில் பிரபஞ்சத்தின் எல்லையைச் சென்று அடைவார்கள்.

அப்படியே அவர்கள் எல்லையை அடைந்தாலும், அது முதலாவது வானத்தைத் தொட்டதாகக் கூட ஆகாது. பிறகு அங்கிருந்து முதலாம் வானத்தை நோக்கி இன்னும் எத்தனை கோடி தலைமுறைகளின் தூரம் பயணிக்க வேண்டுமென்பது யாருக்குமே தெரியாது. மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆற்றலின் எல்லையென்பது எவ்வளவு அற்பமானது என்பதை இதன் மூலம் சிந்திப்போர் புரிந்து கொள்வர். சுருங்கக் கூறினால், எந்தவொரு மனிதனாலும், என்ன தான் தலையைக் குத்தி நின்றாலும் முதல் வானத்தைப் பார்க்கக் கூட முடியாது. முதல் வானத்தைச் சென்றடையும் அளவுக்கு நமது பார்வைக்குப் போதிய சக்தியோ, வேகமோ கிடையாது. ஏனெனில், நமது பார்வை, மற்றும் கருவிகள் போன்ற அனைத்தின் ஆற்றலுமே ஒளியின் வேகத்துக்கு உட்பட்டவை தாம்;

அதைத் தாண்டியவை அல்ல. நமது ஆயுட்காலத்துக்குள் முதல் வானத்தைப் பார்க்கவோ / அடையவோ வேண்டுமென்றால், அதற்கு ஒளியின் வேகத்தையும், சக்தியையும் விடப் பல மடங்கு அதிக வேகமும், ஆற்றலும் தேவை. இதனால் தான், இந்த அதிநவீன விஞ்ஞான யுகத்தில் கூட, இந்தப் பிரபஞ்சத்தின் எல்லையைத் தாண்டிய எதையுமே பார்க்கக் கூட முடியாத அளவுக்கு மனிதன் அற்பமானவனாகவே இருக்கிறான். ஆனால், இதற்கு முற்றிலும் மாற்றமான ஒரு சூழ்நிலை தான் மறைவான படைப்பினங்களின் பரிமாணத்தில் நிலவுகின்றது. ஒளியின் வேகத்தையும் தாண்டிய வேகத்தில் பயணம் செய்யும் வல்லமை சில படைப்பினங்களுக்கு இருக்கின்றது.

இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளும் மறைமுகமான பேருண்மை என்ன? ஒளியின் வேகத்தையும் தாண்டிய வேகமும், ஆற்றலும் கொண்ட பல மறைவான அம்சங்கள் இந்த உலகில் இருக்கின்றன என்பது தான் அந்தப் பேருண்மை. குவையக் கோட்பாடு மறைமுகமாக உணர்த்துவதும் இதே உண்மையைத் தான்.

மேலும், ஐன்ஸ்டைன் போன்ற விஞ்ஞானிகளது சார்பியல் கோட்பாடு போன்ற போலியான நாத்திக விஞ்ஞானத்துக்கும் இதன் மூலம் சாவுமணியடிக்கப்படுகிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. (ஜோடிக் கட்டமைப்பு): துகள்களின் ஜோடிக் கட்டமைப்பை விளக்கும் குவையப் பின்னல்” (Quantum Entanglement) எனும் கோட்பாட்டுக்கு உதாரணம் ஒன்றைக் குறிப்பிடுகிறேன்:

தேன் சேகரிக்கச் செல்லும் சில தேனீக்கள், பல்லாயிரம் கிலோமீட்டர்கள் தாண்டிய தொலைதூரங்களுக்குச் சென்று தேனைச் சேகரித்துக் கொண்டு, கொஞ்சம் கூட வழி தவறாமல் திரும்பவும் தமது கூட்டுக்கு வந்து சேர்கின்றன. மேலும், கண்டம் விட்டுக் கண்டம் நோக்கிப் பறந்து செல்லும் பல பறவையினங்கள், ஆண்டுதோறும் தவறாமல் ஓரிடத்திலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் இன்னோர் இடத்துக்கு அச்சுப் பிசகாமல், கொஞ்சம் கூட வழி தவறாமல் வந்து சேரும். அதே போல் திரும்பவும் பழைய இடத்துக்கு வழிதவறாமல் திரும்பிச் செல்லும். இவ்வாறான ஜீவராசிகள் இவ்வளவு நுணுக்கமாக எப்படி வழிகளை அறிந்து கொள்கிறது என்பதை சென்ற நூற்றாண்டுகளில் ஆய்வு செய்த பல விஞ்ஞானிகள், இறுதியில் ஓரளவுக்கு உண்மையைக் கண்டுபிடித்தார்கள்.

அதாவது இந்தப் பூமியின் மின்காந்தப் புலனை (Electromagnetic field) அடிப்படையாகக் கொண்டு தான் இவ்வாறான ஜீவராசிகள் தமது பயணப்பாதைகளைத் துல்லியமாக வகுத்துக் கொள்கின்றன என்ற உண்மை தான் அது. இருந்தாலும், இவ்வளவையும் கண்டறிந்த அன்றைய விஞ்ஞானத்தால், அது எப்படி? என்ற கேள்விக்குப் பதிலைக் கண்டறிந்து கொள்ள முடியவில்லை.

ஆனால், சமகாலத்தில் வாழக்கூடிய சில விஞ்ஞானிகள், குவையக் கோட்பாடுகளின் அடிப்படையில் சில பறவையினங்களை ஆய்வு செய்த போது தான் உண்மையான காரணத்தைக் கண்டு பிடித்து வியந்து போனார்கள். இவ்வாறான ஜீவராசிகளின் புலன்கள் இயங்குவது “குவையப் பின்னல்” எனும் ஜோடிக் கட்டமைப்புத் தத்துவத்தின் அடிப்படையில் தான் என்ற உண்மை தான் அது.

அதாவது, பறந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும் அவற்றின் பார்வைப் புலனுக்கும் பூமியின் மின்காந்தப் புலத்துக்கும் இடையில் தொடர்ச்சியான குவையப் பின்னல் தொடர்பு நிலவிக் கொண்டேயிருக்கின்றது. இந்தச் குவையப் பின்னல் உறவு மூலமே ஒவ்வொரு கணப் பொழுதிலும் தான் பயணிக்கும் பாதை சரியானதா? தவறானதா என்பதை அவற்றால் துல்லியமாகக் கண்டறிந்து கொள்ள முடிகிறது. இதன் விளைவாக எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் தூரம் கூட்டை விட்டுச் சென்றாலும், சரியான பயணப் பாதையைத் துல்லியமாகக் கண்டறிந்து, வழி தவறாமல் இவ்வாறான பறவைகள் வீடு வந்து சேர்கின்றன என்பது தான் இதுவரை மனிதன் புரிந்து கொள்ளத் தவறிய உண்மை.

இதே போல், திருடனின் சட்டையை ஒரு தரம் முகர்ந்து பார்த்து விட்டு, அவன் எவ்வளவு தூரத்தில் ஒளிந்திருந்தாலும், அவனைச் சரியாக மோப்பம் பிடித்து, போலீஸ் நாய்கள் அடையாளம் கண்டு கொள்வது போன்ற செயற்பாடுகள் கூட இவ்வாறான குவையப் பின்னல் பொறிமுறை மூலம் தான் நடைபெறுகிறது. இந்த உண்மையைக் கூட குவையக் கோட்பாடுகள் தாம் சரியாக அடையாளம் கண்டுகொண்டன. 

மேலும் குவையக் கோட்பாடுகளின் பிரகாரம் உணர்த்தப்படும் இன்னொரு மறைமுகமான உண்மை தான், இந்தப் பிரபஞ்சம் என்பது உயிரற்ற, உணர்வற்ற வெறும் சடப்பொருட்களின் கூட்டுச் சேர்க்கையால் ஆன ஓர் அம்சம் அல்லவென்பது. அதாவது இப்பிரபஞ்சத்திலிருக்கும் ஒவ்வொரு துகளுக்குள்ளும் உயிரோட்டமான ஏதோவொரு சக்தி வியாபித்திருக்கிறது.

நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டைன் போன்றோருடைய கருத்துக்கள் கூறுவது போல், இந்தப் பிரபஞ்சத்தில் உயிரற்ற “சடப்பொருட்கள்” என்று எதுவுமே இல்லை. ஒவ்வொரு துகளுக்கும் அதன் மட்டத்திற்கு ஏற்ப ஏதோவொரு சிந்திக்கும் திறன் இருக்கின்றது. இதனால் தான் “குவையப் பின்னல்” எனும் நிகழ்வே சாத்தியப்படுகிறது. அதாவது, ஒரு ஜோடித் துகள்களில், ஒரு துகளுக்கு ஒரு மாற்றம் நிகழும் போது அதன் ஜோடித் துகள் அதைப் பிரதிபலிக்கும் விதமாக அதுவாகவே எதிர்மாற்றத்தைத் தனக்குள் ஏற்படுத்திக் கொள்கிறது. உயிரோட்டமுள்ள ஏதோவொரு சிந்திக்கும் திறன் இல்லாமல் இவ்வாறான நிகழ்வுகளெல்லாம் ஒருபோதும் சாத்தியப்படாது.

மேலும், குவையப் பொறியியலின் “நிச்சயமற்ற தன்மை” எனும் சித்தாந்தம் கூட இந்த உண்மையைத் தான் காட்டுகிறது. அதாவது, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு சக்திச்சொட்டும், அதை நிர்வகிக்கும் ஒரு பரம்பொருளிடம் அனுமதி கேட்டுவிட்டு, அனுமதி கிடைத்த பிறகே அது அடைய வேண்டிய நிலையை அடைகிறது எனும் உள்ளார்ந்த அர்த்தமே இதில் கூட மேலோங்கி நிற்கிறது.

நியூட்டன், மற்றும் ஐன்ஸ்டைன் போன்ற விஞ்ஞானிகளது சித்தாந்தகள் கூறுவது போல், இந்தப் பிரபஞ்சத்தில் உயிரற்ற சடப்பொருள் (சடம் + பொருள்) என்று எதுவுமே இல்லை. மாறாக, உயிரோட்டமான ஒரு பிரபஞ்சமாகவே இறைவன் இந்த அகிலத்தைப் படைத்திருக்கிறான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.