11/04/2018

அமானுஷ்யம் - ஆவிகள்...


ஆவிகள் தான் நேசித்த இடத்திற்கு வந்து செல்வதையும் தான் நேசித்த நபர்கள் வாழும் இடத்திற்குச் செல்வதை விரும்பும்..

மக்களிடத்தில் ஆவிகளைப் பற்றி வேறு ஒரு அபிப்ராயம் உள்ளது. ஆவிகள் பாழடைந்த மண்டபங்களிலும் மயானங்களிலும் அதிகமாக வாழுகின்றன என்று.

இதில் பாழ்மண்டபங்களில் ஆவிகள் வசிப்பது அவ்வளவு தூரம் உண்மையானது அல்ல. அந்த மண்டபங்களின் தோற்றம் பயமுறுத்துவதாக இருப்பதனால் பெருவாரியான ஜனங்கள் ஆவிகளோடு அவைகளைச் சம்பந்தப்படுத்தி பேசுகிறார்கள்.

ஆனால் சில மண்டபங்களில் ஆவிகள் வசிப்பது உண்டு. அந்த மண்டபங்கள் வாழ்ந்த போது அந்த ஆவிக்குப் பிடித்தமான இடமாகவோ அல்லது ஏதோ ஒரு வகையில் சம்பந்கப்பட்ட இடமாகவோ இருக்கலாம்.

பொதுவாக அப்படிப்பட்ட மண்டபங்களில் வசிக்கும் ஆவிகள் அமைதி அடையாமல் ஏதோ ஒரு வகையான ஆக்ரோஷத்துடன் அந்த மண்டபங்களில் இருக்கலாம்.

ஆனால் மரங்களில் ஆவிகள் வசிப்பது உண்மையானது தான். முருங்கை மரம், கருங்காலி மரம், அசோகமரம் போன்ற மரங்களிலிருந்து வெளிவரும் கரியமிலவாயுவின் தன்மை ஆவிகளின் காற்று உடம்பை பிடித்துவைத்துக் கொள்ள ஏதுவாக இருப்பதனால் இத்தகைய மரங்களில் ஆவிகள் வசிப்பது அவைகளுக்கு மிக சௌகரியமாக இருக்கும்.

மேலும் பெருவாரியான ஆவிகள் மயானங்களில் வாழ்வதை விரும்புகின்றன.

புதியதாக வரும் ஆவிகளை வரவேற்பதற்கும் துன்புறுத்துவதற்கும் இறந்து போனவர்களுக்குத் தவறுதலாகப் படைக்கப்படும் பிண்டங்களை எடுத்துக்கொள்ளவும் புதைக்கப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட தனது உடல் மீண்டும் கிடைக்காதா என்பதற்காகவும் இன்னும் வேறு சில மாந்திரீகர்களால் கட்டப்பட்டும் ஆவிகள் மயானத்தில் நிறைந்திருப்பது இயற்கை ஆகும்.

இது தவிர பழங்கால அரண்மனைகள் போன்றவற்றில் தண்டனை பெற்ற ஆவிகள் மூர்க்கத்துடன் அலைவதையும் சாலை ஒரங்களில் விபத்துக்குள்ளான ஆவிகள் திருப்தி இல்லாமல் அலைவதையும் பழங்கால கிணற்று ஓரங்களில் தற்கொலை செய்து கொண்ட ஆவிகள் அமைதி இல்லாமல் அலைவதையும் வாஸ்து முறைப்படி கடடப்படாத வீடுகளில் சில ஆவிக் குழுக்கள் வாழ்வதையும் அனுபவத்தில் காணலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.