04/04/2018

பெருவெடிப்பு (மறைவான ஞானம்) வேத விளக்கம். உண்மை எப்போதும் கசக்கும்...


பெருவெடிப்பு (The Big Bang) எனும் நிகழ்வின் விளைவாகவே இந்தப் பிரபஞ்சம் உருவானது என்பது தான் இன்றைய விஞ்ஞானம் முன்வைக்கும் கருத்து.

ஒருசில தப்பான புரிதல்கள் இந்தப்
பெருவெடிப்புக் கோட்பாட்டில்
இருந்தாலும், இதில் ஓரளவுக்கு உண்மையும் இருக்கிறது.

உண்மையில் பெருவெடிப்பு நிகழ்வு என்பது மைய நீரோட்ட விஞ்ஞானிகள் கூறுவது போல் ஓர் அணுகுண்டு வெடிப்பது போல் நாலா பக்கமும் சிதறி வெடித்த ஒரு வெடிப்பு அல்ல. அந்த அடிப்படையில் பெருவெடிப்பை விளங்கப் போனால் தான், சடப்பொருள் எங்கிருந்து வந்தது என்ற குழப்பம் ஏற்படும். ஆனால், இதே பெருவெடிப்புக்
கொள்கையை ஒருசில திருத்தங்களோடும் , பின்வரும் அடிப்படையில் விளங்க முயற்சித்தால், எந்தவிதமான குழப்பமும் இருக்காது.

இந்தப் பிரபஞ்சத்தை இறைவன்
சடப்பொருட்களால் படைக்கவில்லை; சக்தியால் மட்டுமே படைத்தான்.
உண்மையில் பெருவெடிப்புக்கு முன் எந்தப் பொருளும் இருக்கவில்லை; வெடித்த பின்பும் எந்தப் பொருளும் உருவாகவில்லை.

சடப்பொருள் என்று எதுவுமே
சுத்தமாக இல்லை. இறைவனின் “ஆகுக” என்ற வார்த்தையைத் தனது வாயிலிருந்து உச்சரித்த அந்த நிகழ்வு தான் பெருவெடிப்பு எனும் நிகழ்வாக
இருக்க வேண்டும். இதுவே சரியான புரிதலும், விளக்கமும் ஆகும்.

“ஆகுக” எனும் இந்த வார்த்தையானது, வல்லமை மிக்க இறைவனின் வாயிலிருந்து வெளிப்பட்ட சத்தம் எனும் சக்தியின் ஒரு துளி மட்டுமே. இந்த சக்தி கற்பனைக்கு எட்டாத அளவு
அபாரமான ஒரு சக்தியாக இருந்திருக்க வேண்டும். தூசு படிந்திருக்கும் ஒரு மேற்பரப்பில் நாம் “ப்பூ...” என்று ஊதும் போது அந்தத் தூசு துணிக்கைகள் எல்லாம் எப்படி ஒரு புள்ளியிலிருந்து சிதறி ஊதப்பட்ட காற்றின் திசையில் வேகமாக விசிறப்படுமோ, அது போன்ற ஏதோ ஓர் அமைப்பிலேயே இந்த நிகழ்வும் இருந்திருக்க வேண்டும்.

அதாவது, இறைவனின் வாயிலிருந்து ஊதி விடப்பட்டது போல் வெளியான “ஆகுக” என்ற இந்த வார்த்தையின் சக்தியானது,. அதன் வேகத்தை மிஞ்சி எந்த ஒரு வேகமும் இல்லை என்று சொல்லும் அளவுக்குக் கடும் வேகத்தில் விசிறப்பட்டு, தூசி துணிக்கைகள் சிதறியது போல் மிக நுண்ணிய
“குவையங்களாக” (Quantum) விண்வெளியில் சிதறியிருக்க வேண்டும்.

பிறகு இந்த குவையங்களே இறைவனின் கட்டளைகளுக்கேற்ப ஆறு
கட்டங்களாக ஒருங்கிணைந்து,
அணுக்களாக, மூலகங்களாக, கல்லாக, மண்ணாக சூரியனாக, சந்திரனாக,
உருவெடுத்திருக்க வேண்டும்.

ஆரம்பத்தில் “ஆகுக” என்ற ஒரு வார்த்தையின் மூலம் இல்லாமையில் இருந்து புதிதாக இந்தப் பிரபஞ்சத்தை தனது சக்தியைக் கொண்டு மட்டுமே உருவாக்கினான் என்பதும், இவ்வாறு
உருவாக்கப்பட்ட குவயங்களைப் பின்னர், தான் விரும்பியவாறு ஆறு
கட்டங்களாக (ஆறு நாட்கள்)
வடிவமைத்துச் செப்பனிட்டு, இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பை நிறைவு
செய்திருக்கிறான் என்பதும் புரிகிறது. இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளும்
உண்மை ஒன்று தான்.

இந்த மொத்தப் பிரபஞ்சமுமே
இறைவனின் ஒரு வார்த்தையின் பிரதிபலிப்பு மட்டுமே. அந்த வார்த்தை அவனது வாயிலிருந்து வெளிப்பட்ட அந்த வேகம் இன்னும் குறையவே இல்லை. அதனால் தான் இன்னும் இந்தப் பிரபஞ்சம் ஓயாமல்
விரிவடைந்து கொண்டே செல்கிறது.

சடப்பொருட்கள் அனைத்தும், உண்மையில் சடப்பொருட்களல்ல;
சக்தியின் பிரதிபலிப்புக்கள் மட்டுமே.

இதே போல் யுகமுடிவு நாளின் போது இந்தப் பிரபஞ்சம் அழிக்கப்படுவது கூட இறைவனிடமிருந்து ஏற்படும் சத்தம் எனும் சக்தியின் மூலம் தான் நிகழும்.

உதாரணத்துக்கு :  இந்தப் பிரபஞ்சம்
உருவாக்கப்பட்ட பெருவெடிப்பு
அடிப்படையில் இந்தப் பிரபஞ்சம் என்பது, "ஆகுக” எனும் இறைவனின் ஒரு வார்த்தை மூலம் வெளிப்பட்ட தூய சக்தியிலிருந்து முளைத்து, விரிவடைந்திருக்கும் வடிவங்கள் மட்டுமே.

இது இறைவனிடமிருந்து நேரடியாக வெளிப்பட்ட சக்தி என்பதால், தூய வடிவில் ஆங்காங்கே பிரபஞ்சத்தில்
வியாபித்திருக்கும் இவ்வாறான குவையங்களில் சிலவேளை படைத்தவனுக்கு நெருக்கமான சாயல்
இருக்க வாய்ப்பிருக்கிறது.

அதாவது நமது யதார்த்தத்தை மீறிய அளவுக்கு இவ்வாறான சக்திகள் அபாரமானவையாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அவ்வாறான சாயல் ஏதும் இருந்தால், அதை ஆதாரமாக வைத்துக் கொண்டு, இந்த சக்தி தான் இறைவன் என்று ஒருபோதும் அர்த்தம் கொண்டு விடக் கூடாது,

இறைவனிடமிருந்து இந்த சக்தி
வெளிப்பட்டதால் தான் இவ்வாறான சக்திகளில் அபார ஆற்றல்கள் இருக்கலாமே தவிர, இது அவன் என்பதால் அல்ல. இந்த மொத்தப் பிரபஞ்சமும் அவனிடமிருந்து வெளிப்பட்ட சத்தம் எனும் சக்தியின் ஒரு துளி மட்டுமே. இறைவனின் ஆற்றலோடும், மகத்துவத்தோடும் ஒப்பிடும் போது, இந்த மொத்த சக்தியும்,
வாயிலிருந்து உமிழும் ஒரு துளி எச்சிலை விடவும் அற்பமானது. அந்தப்
பரம்பொருளோடு ஒப்பிடுகையில் இந்த
மொத்தப் பிரபஞ்சமும் வெறும் தூசு மட்டுமே. இந்தத் தூசை வைத்து, இதைப் படைத்த அவனை அளக்கவோ, அடையவோ முடியாது.

இந்தப் பிரபஞ்சத்தைப் புரிந்து
கொள்வதன் சரியான அனுகுமுறை
இந்த அடிப்படையிலேயே இருக்க வேண்டும்.

அதாவது, எந்தெந்தப் பொருளுக்கு என்னென்ன அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ, அந்தத்த அளவில் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதை மீறிய முக்கியத்துவத்தைக் கொடுப்பதும் தவறு; அதே போல், உரிய
முக்கியத்துவத்தைக் கொடுக்காமல், குறைத்து மதிப்பிடுவதும் தவறு. இது தான் சரியான புரிதல்.

பிரபஞ்சம் பற்றிய இதே விடயத்தை மறைவான ஞானம் எவ்வாறு விளக்குகிறது என்பதைப் பார்ப்போம்...

இறைவனிடமிருந்து வெளிப்பட்ட சக்தியின் மூலம் தான் இந்தப் பிரபஞ்சம் படைக்கப்பட்டிருக்கிறது.

பிரபஞ்சம் படைக்கப்பட்ட பின் அபாரமான இந்த சக்தியானது கண்ணுக்குத் தெரியாத மறைவான ஒரு வடிவத்தில் எம்மைச் சுற்றி எங்கும் வியாபித்திருக்கிறது.

இந்த சக்தி அபாரமானது;
அற்புதமானது; பல அதிசயங்களை நிகழ்த்த வல்லது.

ஏனெனில், இறைவனிடமிருந்து நேரடியாக வெளிப்பட்ட சக்தி இது. இந்த
“மறைவான சக்தி” இறைவனிடமிருந்து
வெளிப்பட்டதால், இதில் இறைத்தன்மை
நிறைந்திருக்கிறது. உண்மையில் இந்த
சக்தியென்பது இறைவனின் ஒரு பகுதி. இறைவன் எனும் பரம்பொருள்
உருவாக்கப் பட்டிருப்பதே இந்த வகையான சக்தியால் தான். ஆதலால், இந்தத் தூய சக்தியை யாரால் தீண்டவோ, அடையவோ முடிகிறதோ, அதன் மூலம் அவரால் இறைவனையே
அடைய முடியும். அதற்கென்று ஒரு தனியான வழிமுறை இருக்கிறது.

இந்த மறைவான சக்தியானது, சத்தம் எனும் அதிர்வு அலைகளின்
அடிப்படையிலான சக்தி. இந்த
சக்திக்கென்று ஒரு குறிப்பிட்ட,
தனித்துவமான அதிர்வெண்
(frequency) இருக்கிறது. அந்த
அதிர்வெண்ணுக்குப் பொருந்தக் கூடிய அதிர்வு வீதத்தில் நமது வாயிலிருந்து கூட சில வகையான சத்தங்களை வெளிப்படுத்தலாம்.

உதாரணத்துக்கு : தியான நிலையில் அமர்ந்து கொண்டு, “ஓம்” எனும் மந்திரத்தை அடித்தொண்டையிலிருந்து
தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அதிலிருந்து வெளிப்படும் சத்தத்தைக்
குறிப்பிடலாம்.

இவ்வாறான மந்திர உச்சாடனங்கள் மூலம் நமது வாயிலிருந்து
வெளிப்படும் சத்தம், பிரபஞ்சத்தின் மறைவான சக்தியின் அதிர்வெண்களோடு சரியாகப் பொருந்திப் போகத் தொடங்கும் போது நாமும், இறைவனின் மறைவான சக்தியும் இரண்டறக் கலந்து விடுகிறோம். இதன் ஊடாக நாமும் படிப்படியாக இறைவனின் ஸ்தானத்தை அடைந்து விடுகிறோம்.

இது முற்றிலும் தவறு முன்பு
கூறிப்பிட்டது போல் இந்த மொத்த சக்தியும், இறைவனின் வாயிலிருந்து உமிழும் ஒரு துளி எச்சிலை விடவும் அற்பமானது. இந்த சக்தியென்பது இறைவனின் ஒரு பகுதிதான்.  எந்தெந்தப் பொருளுக்கு என்னென்ன
அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ, அந்தந்த அளவில் மட்டுமே
முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதை மீறிய முக்கியத்துவத்தைக்
கொடுப்பதும் தவறு.

இந்த மறைவான சக்தி இறைவன் ஆகிவிட முடியாது இதிலிருந்து என்ன தெரிகிறது?

இந்தப் பிரபஞ்சம் ஆக்கப்பட்டதும் சத்தம் எனும் சக்தியைக் கொண்டு தான்; இறுதியில் இது அழிக்கப்படுவது கூட சத்தம் எனும் சக்தியைக் கொண்டு தான்.

அதே போல், ஆரம்பம், முடிவு எனும் இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடைப்பட்ட நிலையில் இன்று நம்மைச் சுற்றி இருப்பவை கூட சக்தியின் பிரதிபலிப்புக்கள் தாம். இது தான் நமக்கு உணர்த்தும் பேருண்மை.

அதாவது, இறைவனிடம் வெளிப்பட்ட சக்தியிலிருந்து தோற்றம் பெற்றிருப்பது
தான் இந்தப் பிரபஞ்சம். யுக முடிவு நாளின் போது இந்த மொத்த சக்தியும் மீண்டும் அவனிடமே திரும்பி விடும்.
தியான நிலையில் கிடைக்கும்
மறைவான ஞாணம் உண்மையில் இறைவனிடத்தில் பேரப்படுவதில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.