13/05/2018

ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3) சத்திய யுகம் - பகுதி 12...

சத்திய யுகத்தின் வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் காணும் தீர்க்க தரிசனப் பகுதி 12-ம் பகுதியாகும். இது பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பாகும்.



தீர்க்கதரிசனங்கள் யாவும் மெய்படும் காலமாக இக்காலம் இருக்கும் என்றும், இந்த காலத்தின் சூழ்நிலைகளை எவராலும் கணிக்க முடியாத அளவில் நிகழ்வுகள் நடக்கப் போவதாக 12-ம் தீர்க்கதரிசனத்தின் முதல் குறிப்பு நமக்கு ஒரு செய்தியை குறிப்பிடுகின்றது. அதாவது வரக்கூடிய சுனாமி, மழை, புயல் என இயற்கையின் பேரிடர்களை இனி ஆராய்ச்சியாளர்கள் கூட கணிப்பது தவறாக இருக்கும் என்றும், ஆனால் சத்திய யுக தீர்க்கதரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தீர்க்கதரிசனங்கள் மெய்படும் காலமாக இக்காலம் இருக்கும் என 12-ம் தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றது.


மலை ஏறி உயிர் துறந்த மாணவ மாணவிகளைப் பற்றி ஒரு அரிய செய்தியினை தற்போது ஊடகம் ஒன்று வெளியிடும் என்றும், அது தமிழக மக்களிடையே பல வியப்புகளையும், ஆச்சர்யங்களையும், மனக்குழப்பங்களையும் ஏற்படுத்தும் என்றும், உயிர் துறந்த மாணவி ஒருவரின் பேச்சுக்குரல் பதிவே இதற்கான விடையை கொடுக்க உள்ளதாக 12-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.



திருச்செந்தூர் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று என்றும், இங்கு கடல் உள்வாங்கும் நிகழ்வுகள் இனி தொடர்ந்து நடக்கும் என்றும், இதனால் மக்களிடையே பெரும் பீதிகள் உருவாகி பெரும் கவலையை ஏற்படுத்தும் சமயத்தில் “ஸ்ரீ முருகபெருமானின்“ அற்புதம் ஒன்று மக்களிடையே வெளிப்படும் என்று 12-ம் தீர்க்கதரிசனம் இங்கு குறிப்பிடுகின்றது.


பட்டினத்தார் பிறந்த ஊரிலிருந்து புதுமையான, விந்தையான செய்தி ஒன்று மக்களிடையே பிரபலமடையும் என்றும், இது சித்தரின் சித்து விளையாட்டாக அமைய உள்ளதாகவும், இதனால் இவ்வுலகம் மறுபிரவேசத்திற்கு ஆயத்தமாகி வருகிறது என்று உண்மையாக மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று 12-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.



சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர், தேக்கம்பட்டி, வெள்ளாளப்பட்டி, ஏற்காட்டில் உள்ள பட்டிப்பாடிவேலூர் போன்ற ஊர்களில் சில அதிசயங்கள் நடந்து பெரும் ஆச்சர்யங்களை மக்களிடையே ஏற்படுத்த உள்ளதாக 12-ம் தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றது.

துன்பம் தரக்கூடிய ஏதும் இவ்வுலகில் நிரந்தரம் இல்லை என்பதற்கு ஏற்றாற் போல் மக்களை துன்புறுத்தி வரும் ஒரு அரசு இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகப் போவதாக 12-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


சிங்கப்பூர் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய நாடு என்றும், இங்கு பல மோசமான நிகழ்வுகள் அரங்கேற்றம் ஆகிட உள்ளதாக 12-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய நிகழ்வை இங்கே எடுத்துக் கூறுகிறது.



பாகிஸ்தான் நாட்டில் இனக்கலவரம் ஒன்று தற்போது தீவிரம் அடையும் என்றும், அங்கு தீவிரவாத செயல்கள் அதிகம் தலைவிரித்து ஆடும் என்றும், அந்நாட்டின் மீது இறைவனின் நீயாயத் தீர்ப்புகள் இறங்கிட உள்ளதாக 12-ம் தீர்க்கதரிசனம் இங்கே ஒரு நிகழ்வின் உண்மைத் தன்மையை நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.



மன்னார் வளைகுடா புயல் தற்போது உருவாகி வருகிறது என்றும், இதன் தாக்கம் 270 KM வேகத்திலிருந்து 340 KM வேகத்திற்கு இருக்கும் என 12-ம் தீர்க்கதரிசனம்  இங்கே மக்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியினை வெளியிடுகிறது.


காலத்தால் அழியாத காவியமான  அன்னை ஆதிசக்தியின் பிரபஞ்ச வெளிப்பாடு இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளதாகவும், இதனை அறிய முடியாது, ஆனால் மக்கள் உணரும்படி இருக்கும் என 12-ம் தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றது.


உலக மக்களின் வாழ்வதார சூழ்நிலைகள் யாவும் இனி படுமோசமாக இருக்கும் என்றும், இக்கால கட்டத்தை “பிரபஞ்சத்தின் ஒரு சூழல்“ என வர்ணிக்கும்படியான நிகழ்வாக அமைய உள்ளதாக 12-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற பழமொழியை நிருபிக்கும் வகையில் சீனாவின் செயலை உலக நாடுகளில் சில நாடுகள் பாராட்டும் என்றும், பல நாடுகள் அதனை எதிர்க்கும் என்றும், இதனால் இந்தியா, சீனா இடையே பெரும் பதற்றம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் வாய்ப்பு 90 % வீதம் இருக்கும் என 12-ம் தீர்க்கதரிசனம் மெய்பட கூறுகிறது.

உண்மைகள் உறங்குவதில்லை என்கிற நமது வருங்கால தீர்க்கதரிசனத்தில் இடம் பெற்ற 8-ம், 9-ம் தீர்க்க தரிசனங்களின் குறிப்புகள் மெய்படும் காலமாக இக்காலம் இருக்கும் என்று 12-ம் தீர்க்கதரிசனம் ஒரு குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


புத்தனின் மறுபிரவேசம் இந்த இந்திய பூமியில் மீண்டும் நடக்க இருப்பதாகவும், தர்மத்தின் நீதி இவ்வுலகை ஆட்சி செய்யும் காலமாக தற்போது உருவாகி வருகிறது என்றும், புத்தர் ஞானம் அடைந்த இடத்தில் ஒரு மாபெரும் அதிசயம் உடனே நடக்க உள்ளதாகவும், அப்பொழுது சீனா மீது இறைவனின் நீயாயத் தீர்ப்பு உடனே இறங்கிட உள்ளதாக 12-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய நிகழ்வினை இங்கே பதிவு செய்கிறது.


காவியத்தின் நாயகன், காலத்தின் பிதாமகன், சத்திய யுகத்தின் பிரஜாதிபதி என வர்ணிக்கப்படும் ஒருவனின் ஆன்மா இவ்வுலகையும், பிரபஞ்சத்தினையும் தனது காலப் பயணத்தால் சுற்றிவிட்டு மறுபிரவேசக் கொள்கையின்படி அதன் சரீரத்திற்குள் பிரவேசம் காண உள்ளது. அன்றைய தினத்தில் உலகம் மாபெரும் வியப்பான சம்பவத்தை காணும் என்றும் உலகை வழிநடத்தும் ஒருவன் தமிழகத்தில் உருவாகி விட்டான் என உலக மக்கள் எண்ணப் போகிறார்கள் என 12-ம் தீர்க்கதரிசனம் சத்திய யுகத்தின் நிகழ்வினை முன்கூட்டியே இங்கே பதிவு செய்கிறது.


தர்ம யுத்தம் ஒன்று தமிழகத்தில் உடனே நடக்க உள்ளதாகவும் இனி அது போராட்டங்களாக மக்களிடையே வெடிக்க உள்ளதாகவும், இதுபோன்ற போராட்டங்களை தமிழக மக்கள் சந்தித்து இருக்க மாட்டார்கள் என 12-ம் தீர்க்கதரிசனம் தமிழகத்தில் வரப்போகின்ற ஒரு சம்பவத்தை இங்கே முன்கூட்டியே பதிவு செய்கிறது.

தமிழக ஆன்மீக வரலாற்றில் இனி பல அரிய நிகழ்வுகள் நடக்க உள்ளதாக இறைக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் பல அதிசயங்களை மக்கள் காணச் செய்ய உள்ளதாக 12-ம் தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றது.


இந்திய மண்ணில் இனி இயற்கை சீற்றங்கள் அதிகமாக இருக்கும் என்றும், அவை நடக்கும் காலமாக தற்போதைய காலம் இதுவாக இருக்கும் என்றும், ஆட்சியாளர்களுக்கும் இது போதாத காலம் என்று 12-ம் தீர்க்கதரிசனம் இங்கே குறிப்பிடுகின்றது. அதற்கான அத்தனை விஷயங்களும் தற்போது உருவாகி விட்டது என்றும், இதன் எதிரொலியாக காஷ்மீரில் பல திடுக்கிடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்க உள்ளதாக 12-ம் தீர்க்கதரிசனம் மேலும் ஒரு நிகழ்வினை இங்கே குறிப்பிடுகின்றது.


பாண்டிய மன்னர்கள் ஆண்ட பூமியில் பல அரிய பொக்கிஷங்கள் இனி பூமியிலிருந்து வெளிப்படும் என்றும், இதன் அர்த்தங்கள், கதை வடிவங்கள் ஒவ்வொன்றும் வரக்கூடிய சத்திய யுகத்தை தெரிவிக்கும் ஊடகங்களாக இருக்கும் என்று 12-ம் தீர்க்கதரிசனம் இங்கே தெரிவிக்கின்றது.



பாமரனும் பண்டிதன் ஆகும் காலமாக இனி வருங்காலம் இருக்கும் என்றும், தமிழகத்தில் கல்வியின் தரம் இனி உயர்வாக இருக்கும் என 12-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய செய்தியினை இங்கே பதிவு செய்கிறது.

சத்திய யுகத்தின் நிகழ்வுகள் இனி ஒவ்வொன்றாக நிகழத் துவங்கும் என்றும், அது நடக்கும் சமயத்தில் ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனத்தில் ஏற்கனவே எழுதப்பட்ட 39-ம் தீர்க்கதரிசனம் மெய்படும் காலமாக அப்பொழுது இருக்கும் என்று 12-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை ஆழமாக இங்கே பதிவு செய்கிறது.

உண்மைகள் உறங்குவதில்லை என்ற நமது வருங்கால தீர்க்கதரிசனத்தில் நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள 9-ம் தீர்க்கதரிசனப் பகுதியும் மெய்படும் காலமாக இக்காலம் இருக்கும் என்று 12-ம் தீர்க்கதரிசனம் இங்கே தனது கருத்தை பதிவு செய்கிறது.


உண்மையின் வெளிச்சம் இந்த உலகத்தின் மீது விடிவெள்ளியாக வரத்துவங்கி விட்டது என்றும், இதுவே நமக்கான நம்பிக்கை துளிர்விடும் காலம் என்று இறைக்குறிப்புகள் தெரிவிப்பதாக 12-ம் தீர்க்கதரிசனம் தனது கருத்தை ஆழமாக இங்கே பதிவு செய்கிறது.

இறைவனின் திருமுகத்தை காண கண்கோடிகள் தேவை. அதில் நமது கண்களும் இடம்பெற கண்ணாக காத்திருப்போம்.

குறிப்பு :  இந்த வருங்கால தீர்க்கதரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக் குறிப்புகள் அனைத்துமே நடைபெறும்.

மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.

அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள்ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.