13/05/2018

கேட்பாரற்று கிடக்கும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம்...


தென்னிந்தியாவின் மிகச்சிறந்த பாசனத்திட்டமென்று எல்லோராலும் கொண்டாடப்பட்ட பி.ஏ.பி பாசனம் இன்று அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தால் அலங்கோலமாகி கிடக்கின்றது.

அமரர் காமராஜர் அவர்கள் முதல்வராக இருந்தபோது கட்டிய தொகுப்பு அணைகள் போக இன்னும் கட்டி முடிக்கப்படாமல் உள்ள ஆனைமலையாறு அணையும் அப்படியே கிடப்பில் போடப்பட்டள்ளது.

அதேபோல் அணைகள் கட்டியபோது கட்டப்பட்ட பிரதான வாய்க்கால் இதுவரை எந்த பராமரிப்பு பணிகளும் செய்யாமல் பாழடைந்து காணப்படுகின்றது.

திருப்பூர் போன்ற நகரங்களில் கட்டங்கள் கட்டிய ஆயக்கட்டு நிலங்களை நீக்கி விவசாயம் நடக்கின்ற நிலங்களுக்கு கூடுதலாக தண்ணீர் தராமல் கேட்பாரற்று தண்ணீர் வீணடிக்கப்படுகின்றது.

ஆனைமலையாறு நல்லாறு திட்டத்திற்காக வல்லுனர்கள் குழுவை நியமனம் செய்துள்ள அரசாங்கம் மேற்கூறியவற்றையும் சரி செய்தால் மட்டுமே பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டத்தை நம்பியுள்ள நான்கு லட்சம் ஏக்கர் விவசாயிகள் பயன்பெறுவார்கள்

இவண்
ஆனைமலையாறு நல்லாறு தண்ணீருக்கான இயக்கம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.