13/05/2018

இலுமினாட்டி - மலாலா யூசப்சையி...


இந்தப் பதிவை எழுதுவதற்கே கஷ்டமாக தான் இருக்கிறது இருப்பினும், இலுமினாட்டிகளின் அரசியலின் தன்மையை மக்களுக்கு எடுத்துக் காட்டுவதில் இது மிகவும் அவசியமான ஒன்று.

அமைதியான முகம், குற்றமற்ற பார்வை , பார்த்தாலே குறைசொல்ல தோன்றாத குழந்தை முகம் இவற்றை எல்லாம் ஒருசேர பெற்றவரே மலாலா யூசப்சையி.

மலாலா பற்றி அறியாதவர்களுக்கு...

இவர் பாகிசுத்தான் நாட்டின் வடமேற்கு எல்லை மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் வசிக்கும் ஒரு மாணவி ஆவார்.

இவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்காக அறியப்படுகிறார்.

இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதற்கான தாலிபானின் தடையை மீறி இவர் பள்ளி சென்று வந்தார்.

2009இல் ஆண்டிலேயே இவரது பி.பி.சியின் உருது வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் பாக்கித்தானிய தாலிபானால் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார்.

இருப்பினும் புனைபெயரில் எழுதி வந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது.

அண்மையில் தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார்.

பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.

மற்றும் 2014 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மிகவும் சிறுவயதில் அமைதி நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார்.

இந்த தகவலை தான் இந்த இலுமினாட்டிகளால் நடத்தப்படும் ஊடகங்கள் நமக்குக் காட்டும். அனால் உண்மை வேறானது...

மலாலா துப்பாக்கியால் சுடப்படவே இல்லை, இந்த சம்பவங்கள் மற்றும் அதன் ஊடான அரசியல் அனைத்தும் திட்டமிட்டு இந்த இலுமினாட்டிகளால் நடத்தப்படும் நாடகங்கள்..

மலாலா வின் தந்தை யூசப்சையி சில உலகத்தர ஆங்கில வழிப் பள்ளிக் கூடங்கள் (international schools) நடத்தி வருகிறார்.

மெக்காலே கல்வித் திட்டத்தை இசுலாமிய சமூகத்துக்குள் புகுத்துவதற்காகவே இந்த துப்பாக்கிச் சூடு நாடகம்..

சரி, இந்த மெக்காலே கல்வித் திட்டத்தை பாகிஸ்தானில் பரப்ப வேண்டிய அவசியம் என்ன?

1) பாலின வேறுபாட்டுத் தத்துவம் , அதாவது பெண்ணிய சார்பு தத்துவம் (feminism).

2) மேற்கத்திய கலாச்சார ஊடுருவல்.

3) சிந்தனை மாற்றம்..

இந்த முன்று செயல்களுக்காக இவர்கள் இந்த கல்வித் திட்டத்தை நடைமுறை படுத்துகிறார்கள்.

பெண்ணிய கருத்துக்கள் திட்டமிட்டே இந்த இலுமினாட்டிகளால் பரப்பப்படுகிறது.

குடும்பம் என்ற அடிப்படை அமைப்புக்கு பெண்ணிய சிந்தனைகளான இல்வாழ்க்கை, தாய்மை அடிப்படையாகும்.

இந்த இயல்பான இரண்டையும் இல்லாது செய்வதற்காகவே பெண்ணியம் (feminism) என்ற கோட்பாட்டை இலுமினாட்டிகள் உருவாக்கி பரப்பி வருகிறார்கள் .

இது மரபுசார் இனங்களின் கோட்பாட்டை அழிக்கும் ஒரு வழியாகும்.

இந்த கருத்தை ஏற்றுக் கொண்ட பெண்கள் நிச்சயம் அவர்களின் கணவரை ஒரு போட்டியாகவும், எதிரியாகவும், சமுதாயத்தால் அடிமைப்பட்டு கிடப்பது போலவும் எண்ணுவார்கள், இதன் விளைவாக குடும்ப அமைப்பு உடையும்..

இந்தியாவின் பாடத் திட்டமும் இதுவே..

நோபல் பரிசு பெற்ற மலாலா, திட்டமிட்டு இலுமினாட்டிகளால் முன் வைக்கப்படுபவர், இதற்கு டைம்ஸ் பத்திரிக்கையின் முகப்பு ஒன்றே போதும்.

மலாலாவை சிவப்பு கொம்புகளுடன் காட்டியது அந்த பத்திரிக்கை, இது ஒரு வகையான ரகசிய அறிவிப்பு..

மலாலாவிற்கு தெரியுமோ தெரியாதோ, இவர் இலுமினாட்டிகளுக்காகத் தான் வேலை பார்க்கிறார்..

இவருக்கு 2016ம் ஆண்டு நோபல் பரிசு தர வேண்டும் என்று அறிவித்தவர் ஏஞ்சலினா ஜூலி, மலாலாவின் பெயரை தன் முதுகில் எழுதி பரப்புரை செய்தவர் மடோனா.

இவர்களும் இலுமினாட்டிகளே...

இவை அனைத்தும் மக்களை திசைத்திருப்பும் இலுமினாட்டி அரசியல் என்பது மட்டும் உண்மை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.