20/06/2018

அறப்போர் இயக்கம் சுற்றுசூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ் கைதை வன்மையாக கண்டிக்கிறது...


பியூஷ் மனுஷ் சமீப காலத்தில் விமான நிலைய விரிவாக்கம் மற்றும் எட்டு வழி சாலை உருவாக்கம் திட்டங்களுக்கு எதிராக ஜனநாயக வழியில் போராடி வருகிறார்.

தமிழக அரசாங்கம் இது போன்ற சுற்றுசூழல் பிரச்சனைகளை ஜனநாயக வழியில் எதிர்கொள்ளாமல் அதற்காக போராடும் ஆர்வலர்களை சிறையில் அடைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

அரசாங்கம் மற்றும் காவல் துறை சுற்று சூழல் பிரச்சனைகளை பொது அமைதி பிரச்சனையாக மாற்ற முயற்சி செய்யாமல் பிரச்சனைகளுக்கான தீர்வை நோக்கி நேர்மையாகவும் உண்மையாகவும் வேலை செய்ய வேண்டும்.

மேலும் ஆர்வலர்களை கடத்தி கொண்டு போய் கைது செய்யாமல் டி.கே.பாசு பரிந்துரைகளை பின்பற்றுவது அவசியம். பியூஷ் சட்டத்தின் படி நடக்ககூடிய சமூக அக்கறை கொண்டவர். அவரை விசாரணைக்கு அழைத்திருந்தால் வருவதற்கு தயாராக இருப்பவர்.

அப்படி இருக்கும் பொழுது இம்முறையில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன ?

அறப்போர் இயக்கம் இதை வன்மையாக கண்டிக்கிறது. நீதிமன்றங்கள் தமிழக அரசின் ஜனநாயகத்திற்கு எதிரான செயல்களை வன்மையாக கண்டித்து, பியூஷை விடுவித்து, ஜனநாயகத்தை மீட்டெடுக்க உதவ வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.