15/08/2018

சமீபத்தில் 4 ஆஸ்கார் விருதையும் மேலும் பல இதர விருதுகளையும் வென்ற the shape of water படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்...


"இது ஒரு விசித்திரமான காதல் கதை"
இதன் கதையை கேட்ட பின் "அதுக்குன்னு இவ்ளோ விசித்திரமான காதல் கதையா " என்று கேட்கும் தோன்றும் அளவு விசித்திர காதல் கதை.

1960 களில் நடக்கிறது கதை..
ஒரு உயர் பாதுகாப்பு செய்ய பட்ட அரசின் ரகசிய லேப்பில் வைத்து ஒரு விசித்திர உயிரினத்தை ஆராய்ச்சி செய்கிறார்கள். அது மனித சாயலில் இருக்கும் 'மெர்மெய்ட் ' மாதிரியான
amphibious வகையை சார்ந்த ஒரு மீன் மனிதன்.

அதை மனித தன்மை அற்ற முறையில் (அது ஒன்னும் மனிதன் இல்லையே என்ற சமாதானதுடன்) கொடூரமாக அடித்து டார்ச்சர் செய்து ஆராய்கிறீர்கள்.

அங்கே லேபில் சாதாரணமாக பெருக்கும் வேலை செய்யும் கதாநாயகி எலிசா ஒரு ஊமை பெண். அந்த விசித்திர உயிரினத்தின் மேல் பரிதாபம் கொள்கிறாள்.

யாரும் பார்க்காத போது அதற்க்கு சாப்பிட முட்டை கொண்டு வந்து தருகிறாள்.

ஊமை என்பதால் தனக்கு தெரிந்த சைகை மொழியை அதற்க்கு கற்று கொடுக்கிறாள்.

இருவரும் சைகையால் பேசி கொள்ள அவர்களுக்குள் நட்பு வளர்கிறது.
தனது குறையை பார்க்காமல் தன்னை சக உயிரினமாக பார்க்கும் அந்த விசித்திர ஐந்து மேல் இருந்த
நட்பு முத்தி போய் " இது மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதல் அல்ல " என்று அந்த உயிரினத்தின் மேல் காதல் கொள்கிறாள் எலிசா

பிறகு ஒரு கட்டத்தில் அதை ஆராய்ச்சி செய்தவர்கள் அதை கொன்று விட முடிவு செய்யும் போது எலிசா அதை லேபில் இருந்து கடத்தி காப்பாற்ற திட்டமிடுகிறாள்.

அரசாங்கத்தின் ஹை டெக் செக்கியுரிட்டி மீறி சாதாரண பெருக்கும் வேலை செய்யும் எலிசா அதை கடத்த முடிந்ததா.? அவர்கள் காதல் என்ன ஆச்சு சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் மீதி கதை.

பசிபிக் ரிம் மற்றும் hell boy படங்களை எடுத்த இயக்குனர் தான் இந்த படத்தை எடுத்தவர் (hell boy இல் கூட இப்படி ஒரு மீன் மனித கேரக்டரை வைத்து இருந்தார் இல்ல ??)

அப்புறம் படத்தில் 3..4.. இடத்தில அடல்ட் ஒன்லி கண்டெண்ட் இருப்பதால் குடும்பத்துடன் பார்க்க நினைப்பவர்களுக்கு இப்போவே எச்சரித்து விடுகிறேன்.

படத்தில் டைரக்டர் சொல்லாமல் சொல்லி இருக்கும் சில விஷயங்கள் சிலர் கவனிக்க தவறி இருக்கலாம்
(எச்சரிக்கை spoiler alart ..)

உதாரணமாக அந்த பெண்ணே ஒரு மீன் மனுஷியாக இருந்து மாறியவளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை வைத்து இருக்கிறார்.

அவள் flash back இல் அவளை குழந்தையில் நீர் நிலை அருகே கண்டு எடுத்ததாக சொல்கிறார்கள்.
படம் முழுக்க அவளுக்கு நீர் உடனான ஈர்ப்பை மறைமுகமாக காட்டி இருக்கின்றார்.

அவள் கழுத்தில் உள்ள 3 கீரல்கள் எப்படி வந்தது என சரியாக சொல்ல படவில்லை. பிற்பாடு அந்த உயிரினம் அந்த கீரல்களை தடவி செதில்களாக்கி அவளை நீரில் சுவாசிக்க வைக்கிறது .

கொஞ்ச விபரீதமான காதல் கற்பனை கதை தான் என்றாலும் சாதா காதல் கதை பார்த்து சலித்து போனவர்கள் இந்த மீன் மனித காதல் கதையை கண்டு ரசிக்கலாம்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.