09/08/2018

தனி பெரும் துணைக்கான ஓட்டம் பற்றி...


இங்க பலரும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் தனக்கான துணைகளை தேடுகின்றார்கள் அதுவும் முழுநேர வேலையாக (அப்போ அப்போ நானும்) இது தேவையா ? தேவையில்லை யா ? இதில் என்ன நடக்கிறது முன்பும் பின்பும்...

இங்க இரண்டே விதத்தில் மட்டுமே இரு துணைகளுடன் வாழ்க்கை பயனிக்கிறது.

இரு அண்டம் சேர்ந்த பின் இரு பிண்டம் சேரும். (Soul then body = love marriage)
                         
அல்லது...

இரு பிண்டங்கள் சேர்ந்து பிறகு அண்டத்தை அதற்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ளும் (body then soul = arranged marriage).

soul then body..

நீ இந்த பூமியில் படைக்கப்பட்ட பின்போ இல்லை படைக்க தயாராகி கொண்டிருக்கும் நேரத்திலோ உனக்கான துனை படைக்கப்பட்டோ படைக்கப்பட்டு கொண்டிருக்கலாம் (உடலால் அல்ல ஆன்மா ரீதியாக
புரியும் னு நினைக்குறேன்)..

இந்த முறையில் துணையாக வரபோகும் பிண்டத்தை நீ தேர்ந்தெடுப்பதற்கு முன்பே உன் அண்டம் இன்னொரு அண்டத்தை தேர்ந்தெடுத்துவிடும். இல்லை என்றால் புது அண்டத்தின் நகர்வுகள் பார்த்து நமது அண்டமும் அந்த அண்டத்தின் பிண்டம் நமது அண்டத்திற்கும் பிண்டத்தின் நகர்வுகளுக்கு சரிவரும் என்று உணர்ந்து இரு அண்டங்களும் முடிவு செய்யும்
(ஆக இந்த செயலை நோக்கி நீ ஓட தேவையில்லை காலம் வருசைபடி அதன் வேலையை செய்து கொண்டு வரும் போது உன்னக்கான காலத்தில் அது உனக்காக இயக்கும் / இயக்கப்படும்)

அண்டம்= ஆன்மா , பிண்டம் = உடல்
(சும்மா ஒரு clarification காக)..

Body then soul (Arranged marriage)...

இப்படி இணையும் இரு பிரபஞ்சத்தை பற்றி பார்ப்போம்...

இந்த முறையில் முதலில் பிண்டம் இணைந்து விடும் பிறகு வழியில்லாமல்
இரு அண்டங்களும் உணர்ந்து இரு பிண்டங்களும் அண்டங்களுக்கும் அதன் நகர்வுகளுக்கு பாதிப்பு வராமல் இரு பிண்டங்களும் தங்களின் அண்டங்களின்
நகர்வுகளை மறு கட்டமைப்பு செய்து கொள்வார்கள்..

இப்படி மறு கட்டமைப்பு நடக்கவில்லை என்றால் இரு பிரபஞ்சங்களுக்கும் சேதம் தான் அது எந்த அளவுக்கு போகும் என்றால் இரு அண்டங்களும் வெவ்வேறு பாதையில் நகர செய்துவிடும்..

ஆனால் இதில் இன்னொரு வகையும் இருக்கு பிரிந்த இரு பிரபஞ்சங்களில் உள்ள அண்டங்கள் நகர்த்தி மீண்டும் இணைக்கும் (innum deep uh orunal pessalam)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.