09/08/2018

சந்திர விழிபாடும் - சூரிய வழிபாடும்...


பலிகொடுத்து சந்திரனின் அடிப்படையில் வாழ்க்கையை வகுத்தவர்கள் சந்திர வழிபாடு செய்பவர்கள்...

சூரிய வழிபாடு என்பது சூரியனை மிகத்துல்லியமாக கணித்து அதன்படி அந்த சூரியசக்தியை தனக்கு சாதகமாக (இயற்கைக்கு எதிராக)  வளைத்து தனது வாழ்க்கையை அமைப்பது சூரிய குலம்.

இயற்கை மனிதனுக்கு கொடுத்த வாழ்வியல் சந்திர வழிபாடு தான்.

சந்தேகம் இருந்தால் இதுவரை தீவுகளை விட்டு வெளியே வராத பழங்குடி கூட்டங்களை கவனித்து தெரிந்து கொள்ளுங்கள் அவர்கள் சந்திரவழி தனது வாழ்க்கையை அமைத்தவர்கள்.

இந்த சூரியகுலம் என பெருமை பேசி கொள்ளும் எந்த இனக்குழுவும் உண்மையான சூரியக்குலம் இல்லை அவர்களுக்கு சூரியனை எப்படி கணிக்க வேண்டும் என்பதே தெரியாது.

எடுத்துக்காட்டு பள்ளர்களில் சிலர் இப்போது நாங்கள் தான் சூரியகுலம் அதாவது இந்திரனின் குலம் என சொல்கிறார்கள், ஆனால் கிராமத்தில் உள்ள பள்ளர்களிடம் கேட்டால் அவர்களின் நாள் கணக்கு வளர்பிறை தேய்பிறை அம்மாவாசை பெளர்ணமி கீழ்நோக்கு மேல்நோக்கு என எல்லாமே சந்திரனை மையப்படுத்தியே இருக்கும். குலதெய்வத்திற்கு பலி கொடுப்பார்கள். அவர்களில் சிலர் தனது சாதி அரசியலுக்காகவும் அரசகுடும்பம் அடிமை பணிக்காகவும் பெருமை என்ற பெயரில் சில தீமைகளை ஒரு இனக்குழுவின் மேல் வழிந்து திணிக்கிறார்கள்.. இதே போல் தான் ஒரு நேரத்தில் தேவர் சாதிகாரர்களுக்கு நடந்தது என்பதை நோக்க வேண்டும்.

எனவே உண்மையான சூரியகுலம் என்பது அந்த அரசகுடும்பம் தான்...

வேண்டுமானால் இப்போது இருக்கும் நகரத்தார் என்ற அரசகுடும்ப எச்சங்களை கொஞ்சம் கவனித்து பாருங்களேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.