06/08/2018

சிறு செய்தி பெரிய அரசியல்...


நாளைய நிஜமாகும் இந்த காட்சியை உங்கள் சிந்தனையில் தீட்டி வையுங்கள் அடுத்த சில ஆண்டுகளில் பாஜக வோ காங்கிரசோ.., அ.தி.மு.க வோ தி.மு.க.வோ இந்த காட்சியை நாம் நிச்சயமாக காண முடியும். அரசு தீட்ட நினைக்கும் இந்த சித்திரத்தை தடுத்ததற்காக நாம் அனேகமாக கைது செய்யப்படலாம்...

பளபளக்கும் சென்னை சேலம் எட்டு வழிச்சாலை பாய்ந்தோடும் லாரிகள். அந்த லாரிகள் பெரும்பாலும் அம்பானி, அதானி அல்லது அவர்களின் உள்ளூர் அடியாட்களுடையதாகத் தான் பெரும்பாலும் இருக்கும். எட்டு வழிச் சாலை நெடுக விவசாயப் பன்னைகள். செழிப்பான விளைச்சல்கள். ஆனால் அதை  நிலத்துக்கு சொந்தக்காரர்களான விவசாயிகள் பயிரிடவில்லை. அம்பானியும் அதானியுமே பயிரிடுவார்கள். கொள் முதல் செய்யப்பட்ட விளைச்சல்களெல்லாம்  50 கிலோ மீட்டருக்கு ஒன்றாக இருக்கிற அதி நவீன பதப்படுத்தப்படும் சேமிப்புக் கிடங்குகளில் இருக்கும்.பின் அவை பாரத் மாலா சாகர் மாலா மூலமாக சில்க் சாலை எனும் சிலந்தி வலை வழிகளில் உலகெங்கும் ஏற்றுமதிச் செய்யப்படும். விவசாய நிலங்களுக்கு சொந்தக்காரர்கள் அம்பானி, அதானியும் தான். விவசாயகள் அம்பானி பன்னைகளில் தொழிலாளர்கள். இது தான் மோடி சொல்கிற மோடி சொல்கிற விவசாயத்தை இரட்டிப்பாக்கும் முயற்சி.

1.மோடி அரசின் 2018 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மையை விரிவுபடுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூங்கில் வளர்ப்பை ஊக்கப்படுத்த ரூ.1200 கோடி ஒதுக்கீடு. வேளாண் பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்த ரூ.1400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2.சமீபத்தில் சீனா சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்தார். அப்போது இந்தியாவில் இருந்து சர்க்கரை, அரிசி, மருந்து பொருட்களை சீனா இறக்குமதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.
அதன்பிறகு இந்திய சர்க்கரை ஆலைகள் சங்க அதிகாரிகள் மற்றும் 25 சீன சர்க்கரை நிறுவனங்களின் 50 உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது. இதன்பிறகு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்படி 1.5 மில்லியன் டன் சர்க்கரை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

3.ஆப்ரிக்க நாடுகளுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமராக மோடி சென்ற போது 200 பசுக்களை அந்த நாட்டிற்கு பரிசளித்த போதே நாம் தெரிந்து கொள்ளலாம் ஆப்ரிக்க நாடுகளுக்கு அதானியும் அம்பானியும் விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்யப் போகிறார்கள் என்று.

இப்படி விவசாய ஏற்றுமதியை குறிசைத்து இந்திய அரசு இயங்குகிற பின்பனியில் தான் நாம் நேற்று பிரதமரோடு  நடந்த தமிழக கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சந்திப்பையும் நாம் காண வேண்டும். இந்த சந்திப்பும் மோடியின் வாக்குறுதியும் இப்போது விவசாயிகளுக்கு மகிழ்வளிப்பதாக இருக்கலாம் ஆனால் வரும் காலத்தில்....?

தோழர் மாவோ கூறியது போல "ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னே ஒரு வர்க்கத்தின் நலன் இருக்கிறது." அது போல இந்த செய்திக்கு பின்னே அதானி அம்பானி நலன் தான் இருக்கிறது...

- இந்திய மக்கள் முன்னணி

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.