ஒரு மாதமாக தினமும், 100 மி.மீ., மழை பெய்து வருகிறது. துவக்கத்தில் ஆலப்புழா போன்ற பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. தற்போது வடக்கு, மத்திய கேரளா முழுவதும் வெள்ள பாதிப்பு காணப்படுகிறது. மாநிலத்தில் உள்ள 24 அணைகளும் திறக்கப்பட்டுள்ளன.
கேரள அணை பாதுகாப்பு ஆணைய தலைவர் நீதிபதி ராமசந்திரன் நாயர் கூறியதாவது...
இடுக்கி பகுதியில் உள்ள குட்டநாடு என்ற இடம், 84 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதற்கு காரணம் அப்பகுதியில் இருந்த வயல்வெளிகளை அழித்து வீடுகளையும், பிரமாண்ட கட்டடங்களையும் கட்டியது தான். நிலச்சரிவு பாதிப்பு ஏற்படும் என்ற அபாயம் உள்ள பகுதிகளை ஆக்கிரமித்து மக்கள் வீடுகளை கட்டி விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிபுணர்கள் சிலர் கூறியதாவது...
கேரளாவில் நிலப்பகுதியை எப்படி பயன்படுத்துவது என்பதற்கான திட்டம் சரியாக மேற்கொள்ளப்படவில்லை. கேரளாவில் 100 ஆண்டுகளில் இதுபோன்ற வெள்ள பாதிப்பு, நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்டது இல்லை. மக்கள் மெத்தமனமாக இருந்து விட்டனர். இயற்கை சீரழிவு ஏற்படும் பாதிப்பு பகுதிகளில் கட்டடங்களை கட்டி விட்டனர். 1924ம் ஆண்டு கேரளாவில் இதுபோன்ற வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், அப்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் தான் தற்போது விமான நிலையங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன.
இடுக்கி பகுதி நில நடுக்கம் அபாயம் உள்ள இடம். ஆனால், அங்கு தான் கட்டுமான பணிகள் அதிகளவில் நடந்து வருகின்றன. குவாரி பணிகளும் அதிகளவில் நடக்கின்றன. 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து கேரள அரசு எந்த பாடத்தையும் கற்றதாக தெரியவில்லை.
இவ்வாறு நிபுணர்கள் கூறினர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.