புதுச்சேரியை சேர்ந்த ராஜ மனோகரன் என்ற இளைஞர் 3 புதிய ஏவுகணைகளை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.
புதுச்சேரி முருங்கபாக்கம் அங்காளம்மன் நகரைச் சேர்ந்தவர் ராஜ மனோகரன். இவருக்கு சிறுவயதில் இருந்தே ராக்கெட்டுகளின் மீது ஆர்வம் இருந்தது.
தீபாவளி சமயங்களில் பட்டாசுகளின் மருந்தை சேகரித்து, அவற்றைக் கொண்டு, சிறிய ராக்கெட்டுகள் செய்து, தனது கனவுக்கு உயிர்கொடுக்கத் தொடங்கினார்.
நாளடைவில் இந்த ஆர்வம், மென்மேலும் பெருகி, கடந்த 12 ஆண்டுகளாக முயன்று 3 ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளார்.
ஐடிஐ படித்துள்ள ராஜ மனோகரன் தன்னுடைய கண்டுபிடிப்புகளுக்கு விஷன் 2020, மிஷன் அர்ஜுனா என்று பெயரிட்டுள்ளார்.
மிஷன் அர்ஜுனா என்ற ஏவுகணை 800 கிலோ மீட்டர் வேகத்தில், 300 கிலோ மீட்டர் தூரத்தினை கடந்து சென்று தாக்க கூடிய வகையில் வடிவமைத்துள்ளார்.
இது ஒரே நேரத்தில் மூன்று இலக்குகளை தாக்க கூடிய வல்லமை பெற்றது என தெரிவிக்கிறார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.