மனதை மாற்றுங்கள்...
மனதில் வெகுநாள் பழக்கமாக இருக்கும் ஒரு பாணியை மாற்ற வேண்டுமென்று கருதினால், சுவாசம் தான் சிறந்த வழி. மனதின் எல்லா பழக்கங்களுமே சுவாசத்தின் பாணியை பொறுத்தே இருக்கிறது.
சுவாசத்தின் பாணியை மாற்றுங்கள், உடனே மனது மாறுகிறது, சட்டென்று மாறுகிறது. முயன்று பாருங்கள்.
எப்போதேல்லாம் நீங்கள் முடிவெடுக்க வேண்டிய நேரம் வருகிறதோ, நீங்கள் பழைய பழக்கத்திற்கே போகிறீர்கள், உடனே மூச்சை வெளியே விடுங்கள் – ஏதோ அந்த முடிவை அந்த வெளியே விடும் மூச்சுவழியாக தூக்கி எறிவது மாதிரி. வயிற்றை உள்ளே இழுத்து வெளியே மூச்சை விடுங்கள்.
நீங்கள் அந்த காற்றை வெளியே எறியும் போது, அந்த முடிவை தூக்கி எறிவதைப் போல உணருங்கள், அல்லது நினையுங்கள்.
பிறகு புதிய காற்றை ஒன்றிரண்டுமுறை ஆழமாக உள்ளே இழுங்கள்.
என்ன நடக்கிறது என்று பாருங்கள். முழுமையான புத்துணர்ச்சியை
உணர்வீர்கள்.
பழைய பழக்கங்கள் வந்து ஆக்ரமிக்க முடியாது.
அதனால் மூச்சை வெளியே விடுவதிலிருந்து துவங்குங்கள், உள்ளே இழுத்தல்ல.
எதையாவது உள்ளே எடுக்க வேண்டுமென்றால், மூச்சை உள்ளே
இழுக்கத் துவங்குங்கள்.
எதையாவது வெளியே தூக்கி எறிய நினைத்தால், மூச்சை வெளியே விடத்துவங்குங்கள்.
மனம் உடனே எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை பாருங்கள்.
உடனே உங்கள் மனது வேறு எங்கோ நகர்ந்துவிட்டதை காண்பீர்கள்.
ஒரு புதிய காற்று உள்ளே வந்திருக்கிறது. நீங்கள் அந்த பழைய பள்ளத்தில் இல்லை, அதனால் அந்த பழைய பழக்கத்தை மறுபடியும் கொண்டு வரமாட்டீர்கள்.
இது எல்லா பழக்கத்திலும் உண்மை.
உதாரணமாக, நீங்கள் புகை பிடிக்கிறீர்கள்...
புகைக்க வேண்டுமென்கிற உந்துதல் வரும் போது, உடனே அதைச் செய்ய வேண்டாம், அப்போது மூச்சை வெளியே விடுங்கள், அந்த உந்துதலை தூக்கி வெளியே எறியுங்கள்.
புதியகாற்றை உள்ளே இழுங்கள், உடனே அந்த உந்துதல் போய்விட்டதை காண்பீர்கள்.
உள்மாற்றத்திற்கு இது மிக,மிக முக்கியமான கருவியாக இருக்கும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.