கர்நாடகத்தில் பாஜக ஆட்சியின்போது அமைச்சராக இருந்த ஜனார்த்தன ரெட்டி ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இரும்புத்தாது சுரங்கங்களை நடத்தி வருகிறார்.
அம்பிதந்த் மார்க்கெட்டிங் என்னும் நிறுவனம் முதலீட்டாளர்களின் பலகோடி ரூபாய் பணத்தை ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது.
அமலாக்கத்துறையின் நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக அம்பிதந்த் நிறுவனர் சையது அகமது பரீத், ஜனார்த்தன ரெட்டி மூலம் இருபது கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் தகவல் வெளியானது.
இதற்காக 2கோடி ரூபாய் பணம், 57கிலோ தங்கக் கட்டிகள் ஆகியவற்றை ஜனார்த்தன ரெட்டியிடம் வழங்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்துத் தகவல் அறிந்த பெங்களூர் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் ,கூடுதல் ஆணையர் மஞ்சுநாத் சவுத்ரி தலைமையில் பல்லாரியில் உள்ள ஜனார்த்தன ரெட்டியின் வீட்டில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.