09/11/2018

ஆட்சியின் இறுதி கட்டத்தில் ரிசர்வ் வங்கியில் ஆட்டைய போடத்துணிந்து விட்ட பாஜக மோடி அரசு...


ரிசர்வ்  வங்கி தன் கைவசம் வைத்திருக்கும் அந்நிய செலாவணி பணமான 9 . லட்சத்து 50  ஆயிரம்  கோடி  ருபாய் பணத்தைக் கேட்டு மோடி அரசு மிரட்டிக்கொண்டு இருக்கிறது. அதை கொடுக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி சொல்லிக்கொண்டு இருக்கிறது. இத்தனைக்கும் ரிசர்வ் வங்கியின் இன்றைய கவர்னர் யாரென்று பார்த்தால் மோடி அரசால் நியமிக்கப்பட்ட குஜராத்தியான உர்ஜித்  படேல்.

மோடியால் நியமிக்கப்பட்டவர் மோடி அரசுக்கு பணம் கொடுக்க பயப்படுகிறார் என்றால் நிலைமை எந்த அளவுக்கு இருக்கிறது என்று பாருங்கள். ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த என்னை நீக்கி விட்டு அந்த இடத்தில் தனக்கு வேண்டப்பட்ட , தான் சொல்வதை எல்லாம் செய்யக்கூடிய ஊர்ஜித படேலை சென்ற வருடம் நியமித்தார்கள். இன்று அவரே மோடி அரசால் மிரட்டப்பட்டு கலக்கத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளார்..

ஆட்சி பறி போகிற தருணம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் மையமான ரிசர்வ் வங்கியைத் தேட்டைப் போட துணிந்து இருக்கிறார்கள் மோடி அரசினர். மற்றவங்கிகள் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு விட்டன. ரிசர்வ் வங்கி மட்டும் தான் இன்னும் கைவைக்கப்படாத இடம். அங்கும் நுழைய திட்டமிட்டுள்ளார்கள். மத்திய அரசின் மிரட்டலுக்கு பயந்து அந்நிய செலாவணி பணத்தை எடுத்து கொடுத்து விட்டால் அவ்வளவுதான், எல்லோரு வெளிநாட்டுக்குப் பறந்து விடுவார்கள். இந்திய மக்கள் நடுத்தெருவுக்கு வந்து விடுவார்கள்.

உர்ஜித் படேல் மோடியின் மிரட்டலுக்கு பயந்து விடக்கூடாது. இல்லையேல் மக்கள் புரட்சி வெடிக்கும்.

-- முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் தமிழர் ரகுராம் ராஜன் அவர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.