23/11/2018

பத்து அடிப்படை கோட்பாடுகள்...


வாழ்க்கை வளத்திற்கான பத்து அடிப்படை கோட்பாடுகள் முதலில் அறியுங்கள் பிறகு தன்னம்பிக்கையை அதில் கூடுதலாக வளர்த்துக் கொள்ளுங்கள்...

1. உயரிய எண்ணங்கள் - Mindfulness
2. வாழ்கையின் நோக்கம் - Life's Purpose
3. சுய உணர்வு - Self Awareness
4. குறிக்கோள் - Goals
5. செயல் - Action
6. ஆற்றல் - Energy
7. ஞானம் - Wisdom
8. தன்னம்பிக்கை - Self Confidence
9. அன்பு - Love
10. கடவுள் நம்பிக்கை - Entheos

1 . உயரிய எண்ணங்கள் - நாம் நமது எண்ணங்களை மேன்படுத்தாவிட்டால் நமது வாழ்க்கை முன்னோக்கி செல்லாது. நமது வாழ்க்கையின் அடிப்படை நமது எண்ணங்களை பொறுத்தே அமைகிறது. இதையே புத்தர் "நமது எண்ணங்களே நாம்" என்று கூறுகிறார்.

2 . வாழ்கையின் நோக்கம் - நமது வாழ்கையின் நோக்கம் என்னவென்று நாம் அறிந்துகொள்ள வேண்டும். நாம் எதை செய்தால் நமது மனம் மகிழ்ச்சி அடைகிறது ? நாம் எதை செய்தால் நமது மனம் முழுவதுமாக முழ்கிவிடுகிறது, புத்துணர்ச்சி அடைகிறது என்று அறிந்துகொள்ள வேண்டும்.

3 . சுய உணர்வு - நீ உன்னை அறிந்தால்...உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்... என்ற பாடல் தான் நினைவிற்கு வருகிறது. ஒருமுறை டெல்பி-யின் ஆரக்கிள் சாக்கரடிஸ் தான் உலகத்தின் தலை சிறந்த ஞானி என்று உரைத்தது, ஏன் என்றால் அவருக்கு தான் தனக்கு என்ன தெரியாது என்று தெரியும் என்று கூறியது. நாம் நம்மை பற்றி எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறோம் என்பதை பொறுத்தே நம் வாழ்கையின் வெற்றி தோல்வி அமைகிறது.

4 . குறிக்கோள் - குறிக்கோள் இல்லாத வாழ்க்கை இருட்டில் விளக்கு இல்லாமல் நடப்பதற்கு சமம். நமக்கு குறிக்கோள் இல்லாவிட்டால் வாழ்க்கை என்னும் ஓடத்தில் காய்ந்த இலைகளை போல நாம் அடித்து செல்லப்படுவோம். குறிக்கோள் ஒரு கலங்கரை விளக்காக இருந்து நமது செயல்களை ஒருமுகப்படுத்துகிறது.

5 . செயல் - சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்"
இதற்கு மேல் "செயல்"-லை நான் சொல்ல என்ன இருக்கிறது.

6 . ஆற்றல் - நமக்கு அளவிட முடியாத ஆற்றல் இருப்பதாக நம்மில் பலர் தவறாக எண்ணி கொண்டிருக்கிறோம். ஆற்றலுக்கு வரையரை உள்ளது. ஆற்றலை கையாளும் அறிவு நமக்கு தேவைபடுகிறது. தேவையில்லாத சொற்ப காரியங்களில் நமது ஆற்றலை செலவிட்டால் நாம் எவ்வாறு நமது குறிக்கோள்ளை அடையமுடியும்.

7 . ஞானம் - நமக்கு வயது கூடி கொண்டே போனால் ஞானமும் அதிகரித்து கொண்டே செல்லும் என்பது சாத்தியம் அல்ல. நமக்கு வாழ்க்கை தரும் அனுபவங்களை அலசி ஆராய்ந்த பின்னரே நமக்கு ஞானம் தோன்றும்.

8 . தன்னம்பிக்கை - தன்னம்பிக்கை என்பது தூண். அதுவே நம்மை தோல்வியை கண்டு துழன்று விடாமல் நம்மை தாங்கி நிற்கும். தன்னம்பிக்கை என்பது ஒரு திறமை அதை நம்மால் வளர்த்து கொள்ள முடியும்.

9 . அன்பு - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது - அன்புள்ள வாழ்கையே பயண்ணுள்ள வாழ்க்கை என்கிறார் உலகத்தின் முதல் சுய முன்னேற்ற நூலை எழுதிய நமது திருவள்ளுவர்.

10 . கடவுள் நம்பிக்கை - மனிதனுக்கு இறை நம்பிக்கை மனித வாழ்க்கைக்கு தேவை. நமது வாழ்கையின் பல்வேறு இடங்களில் நாம் இறைவனை பார்க்கலாம். உன் மீது நம்பிக்கை கொண்டுள்ள இறையாற்றலின் மீது நீ நம்பிக்கைவை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.