23/11/2018

கண்களை ஏன் சிமிட்டுகிறோம்...


கண்களை சிமிட்டுதல் என்பது கண் இமைகள் மூடித் திறக்கும் ஒரு வேகமான செயல்பாடாகும்.

இச்செய்கை சுமார் 400  மில்லி செகண்டில் (milliseconds) நடைபெறுகிறது.

இவ்வேகம் சூழ்நிலை மற்றும் உடல் ஆரோக்கியம் போன்ற காரணிகளால் மாறுபடும்..

கண் விழிகளில் படிந்திருக்கும் தூசு, துகள்களையும் அகற்றவும், விழிகளின் ஈரத்தன்மை உலராமல் பாதுகாக்கவும் நாம் கண்களை சிமிட்டுகிறோம்..

சராசரியாக ஒரு நாளைக்கு நாம்  15,000 தடவை கண் சிமிட்டுகிறோம் அதாவது ஒரு நிமிடத்து சுமார் பத்து முறை..

ஆண்களை விட பெண்கள் அதிகம் கண் சிமிட்டுகிறார்கள்..

விலங்குகளும் கண் சிமிட்டுகின்றன. மீனுக்கும், பூச்சி இனங்களுக்கும் கண் இமைகள் கிடையாது எனவே அவற்றிற்கு கண் சிமிட்டும் வேலை இல்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.