23/11/2018

நகரமயமாக்கலின் அடிப்படை இயல்புத் தன்மையான சுயநலத்தை முழுதும் கற்றுக்கொண்டது தமிழகத்திற்கு தலைநகராக சொல்லப்படும் சென்னை...


பிற மொழி பேருக்கு ஏற்றது போலவே தன் மாநிலத்தை சார்ந்த பல மாவட்டங்களையும் பிரிச்சி பேசுதோ என்னவோ ? நம்மள ஆள்றவன் தான் நம்ம நிலத்தவன் இல்லனா, நம்மை ஆளும் தலைநகரும், அதன் மக்களும் அது போலவே செயல்படுறாங்க.

உங்களுக்கு பிரச்சனைனா கதறுவீங்க, நாங்க வரனும்.. ஆனா எங்க டெல்டா பக்கத்துக்கு ஏதாச்சும் பாதிப்புனா உங்களுக்கு மாலைக்கண் நோய் / Madras Eye  வந்திடும் போல.

நகர சென்னை வாசிகளே நீங்களாம் முழுதும் தற்சார்பிழந்த பிராய்லர் கோழிகள் என நினைவில் கொள்ளுங்கள், நீங்க மட்டும் எந்நேரமும் காகிதத்துக்காக உழைக்கிறதா நினைச்சிக்காதீங்க, டெல்டா விவசாயிகள் உங்களை விட  அதிகமே உழைக்கிறாங்க ஆனா போதுமான வருவாய் அவங்களுக்குமில்ல.

ஒருத்தர் இயல்பை மாற்றமுடியாது தான் ஆனா சுயநல நிலமா கட்டமைத்து, சுயநலமாவே வாழப்பழகிய உங்க மனநிலையையும் நாங்க தெரிஞ்சிக்கிட்டோம்.

நீங்க சாப்பிடுற சோறு எங்க மண்ணுல  விளைஞ்சது, அதுல போடுற உப்பு தூத்துக்குடி பக்கம் விளைஞ்சிது ஆனா பிற உயிரினங்களிடத்திருக்கும் துளி நன்றியோ, இரக்கமோ உங்ககிட்ட இல்லாததை இப்போ தெரிஞ்சிக்கிட்டோம்.

நாங்க எப்போ பார்த்தாலும் சென்னையை குறை சொல்றோம்னு நினைக்காதீங்க ஆனா ஒவ்வொரு விளைவுகளில் உங்க பங்கும் அடங்கியிருக்கு..

ஓ@# இனி இதுக்கு மேல உங்களாண்ட பேச விருப்பமில்லடா, நீங்க கடைசி வரை சுயநலமாவே இருங்க நாங்க எப்படியும், எந்த நிலை வந்தாலும் எங்க தாய் நிலம் ,தற்சார்பை விட்டுத் தர மாட்டோம்டா ஏன்னா அது எங்களுக்கு சோறு போடுற தெய்வம் , உங்க சுயநல இயல்பு நீங்க இருக்குற நிலத்தை வித்துட்டு ஓடி வந்தபோதே புரிஞ்சிருச்சு,

உவன் இங்கே சொல்றது பெரு வணிக செல்வந்தர்களுக்கு மட்டுமே, இதே சென்னைல இன்னொரு கூட்டமிருக்கு சொந்த ஊரை விட்டு பொழப்பு பார்க்க வந்த கூட்டம் அது எப்போமே தன் நிலை உணர்ந்தது, வந்த மண்ணையும் காப்பாத்தும் இயல்புடையது, பிறகு சென்னையின் மீனவ பூர்வக்குடிகள்... அவங்களுக்கு உவனின் தலை தாழ்ந்த நன்றிகள்.

நீங்க உதவ வேணாம்டா பாதிக்கப்பட்ட இடத்தின் விளைவுகளை பகிர்ந்தாலே போதும், நாங்க யாரையும் எதிர்ப்பார்த்து வாழ்றதில்லை... நன்றி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.