27/11/2018

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு பேருந்துகள் இயக்கம்...


புதுச்சேரி: சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கேரள அரசு பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிப்பதை கண்டித்து புதுச்சேரியில் பந்த் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில பாஜக அறிவித்திருந்தது. அதன் படி இந்த பந்த் போராட்டம் என்பது இன்று காலை 6 மணிக்கு தொடர்ந்து தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த பந்த் போராட்டம் காரணமாக தனியார் பேருந்துகள், ஒருசில ஆட்டோக்கள
 இயங்கவில்லை. மேலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படக்கூடாது என்பதற்காக சில தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசு பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல செயப்படுகினறன. ஆனால் பாஜக முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தாலும் தமிழக அரசு, புதுச்சேரி அரசு பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்படுகினறன.

புதுச்சேரி பேருந்து நிலையம் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகள் இயங்காததால் கிராம பகுதிகளில் இருந்து புதுச்சேரிக்கு வரும் பயணிகளுக்காக அரசு பேருந்துகள் கிராமபுற செல்ல போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பேருந்துகளுக்கு கல்வீச்சு போன்ற அசம்பாவிதங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதுச்சேரி நகரப்பகுதி மட்டுமில்லாமல் கிராம பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதே போல பெட்ரோல் பங்குகளும் இன்று வழக்கம் போல இயங்குகின்றன. ஒருசில கடைகள் மட்டும் தான் அடிக்கப்பட்டிருக்கின்றன. இந்த போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கோ, சட்ட ஒழுங்குக்கோ எந்த பிரச்சனையும் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் நேற்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் புதுச்சேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த பந்த் போராட்டத்தில் எந்த பிரச்சையும் ஏற்பட கூடாது என்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் 6 மணிக்கு முன்பாக லாஸ்பேட்டை பகுதியில் தமிழக அரசு பேருந்து கண்ணாடியும் அதேபோல கிராம பகுதியில் ஒரு தனியார் பேருந்து கண்ணாடியையும் மர்ம நபர்கள் கல் வீசி பேருந்தை தாக்கினர். பின்பு சிறிது நேரத்தில் பேருந்து கண்ணாடியை உடைத்த 4 பாஜகவினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகினறனர்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.