06/12/2018

10th Man rule...


இது ஒரு ஆங்கில படத்தில் வந்த ஒரு சிறிய வசனம் தான் ஆனா ரொம்ப நிதர்சனமான ஒன்னு.

இந்த படம் ஒன்னும் பெரிய உலக சினிமால்லாம் இல்ல ஒரு காமர்சிலியல் zombie அப்போகலிப்ஸ் படம் தான். "World war Z".

அதாவது உலகம் முழுக்க zombie க்கள் பரவுகிறது. இதை பற்றி முன்கூட்டியே எல்லா அரசுகளுக்கும் தகவல் தரப்படுகிறது இருந்தும் எல்லா அரசுகளும் இந்த செய்தியை ஒரு புரளியாகவும் சாத்தியமற்ற ஒரு விஷயமாவும் பாத்து எந்த முன்னேற்பாடும் செய்யாமல் விட்டுவிடுகிறது.

 ஆனால் ஒரே ஒரு நாடு மட்டும் இது வதந்தியாகவே இருந்தாலும் அதை ஆராய்ந்து அதற்க்கு முன்னேற்பாடாக அந்த நகரத்தை சுற்றி பலம் வாய்ந்த இரும்பு வெளியை அமைக்கிறது. அது வேற எந்த நாடும் அல்ல "இஸ்ரேல்" தான். உடனே எதோ கான்ஸபிரசி பேச போறேன்னு நினைக்கவேண்டாம். இந்த இல்லுமினாட்டி முத்திரைய மறைமுகமா காட்டுறது அத பத்தி பட்டும் படாம பேசுறது எல்லாம் ஹாலிவுட் இயக்குனர்கள் பண்ற ஒரு வகையான மார்க்கெட்டிங். உதாரணத்துக்கு நம்ம ரஞ்சித் அவர் படத்துல ராவண காவியம் புத்தகத்தை காட்டுறது, அம்பேத்கார் பொறந்த நாள காட்டுறது இதெல்லாம் ஒரு வகையான மார்க்கெட்டிங் அப்புறம் தன்னை அறிவாளின்னு காட்டிக்க வைக்கிற சில்லறை தனமான விஷயங்கள். (மணி ரத்தினத்தை ஏன் சொல்ல நீ அவாளான்னு சண்டைக்கு வாராந்திங்க நான் அவர் படத்தை எல்லாம் பாத்ததே இல்ல). இதுல subliminal தகவல்கள் அடங்காது, அது முற்றிலும் வேற ஏரியா.

சரி விஷயத்துக்கு வருவோம் பிரட் பிட் இஸ்ரேல் அதிபர் கிட்ட "நீங்க மட்டும் இந்த விஷயத்தை புரளின்னு விடாம, இந்த அளவு பாதுகாப்பை அதிகப்படுத்துன காரணம் என்னனு" கேப்பார்.

அதுக்கு அவர் தர பதில் தான் இந்த பதிவுக்கே காரணம்.

" 9 பேர் ஒரு முடிவை ஆமோதிக்கும் பொது 10 வது ஆள் அதை நிராகரிப்பார்"

இந்த ஒற்றை வரி தான், கொஞ்சம் தெளிவா பாப்போம். அதாவது பலர் சேர்ந்து இது தான் சரி இந்த முடிவு தான் சிறந்த ஒன்றுன்னு அனைவரும் ஒருமனதாக ஆமோதிக்கும் பொது அந்த 10வது ஆள் அந்த கருத்து எப்படி பட்ட ஆக சிறந்த கருத்தா இருந்தாலும் அதை எதிர்பார். அதை எதிர்ப்பதற்கான அணைத்து காரணிகளையும் தேடி பிடிப்பார். இது தான் 10வது ஆளின் விதி. இந்த செயல்முறை மூலம் மிக சிறந்த முடிவாக இருந்தாலும் அதில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்படும் இதுவே இதன் நோக்கம்.

இன்னைக்கு வரை மனித இனம் முழுவதும் அழியாமல் இயங்குவதற்கு முக்கிய காரணியே இந்த 10வது ஆள் விதிமுறைதான். ஆம் தலைமை ஒரு மிக சிறந்த கருத்தியலை வடிவமைச்சி மக்கள் அதோட கட்டுக்குள் வைக்கும் அதே நேரத்துல அதே தமைமைய சார்ந்த பத்தாவது ஆள் அந்த கருத்தியலுக்கு எதிர்ப்பா இன்னொரு விஷயத்தை உருவாக்குவார். ஒரு கட்டத்துல 9 பேர் உருவாக்கிய கருத்தியல் காலப்போக்குல கரையும் பொழுது 10வது ஆள் கணித்த விஷயம் செயலாக்கம் பெரும் இப்ப அந்த 9 பேருல பலர் இந்த 10 வது ஆளோட இருப்பாங்க. மறுபடி அதே கூட்டத்துல இன்னொரு 10வது ஆள் உருவாவான் அவன் இந்த கருத்தியலில் உள்ள ஓட்டைய சொல்லி புதிய கருத்தியலை ஆரம்பிப்பான். ஒரே கருத்தியலில் மட்டுமே மனிதத்தை கட்டுக்குள் வைக்க முற்படும் பொது ஒரு கட்டத்தில் மனித இனம் மொத்தமாக காட்டில் இருந்து வெளிவந்து anarchisam என்னும் விதி இல்லாத கட்டுப்பாடு இல்லாத ஒரு வாழ்வியலை நெருங்கும். இத்தனை நாள் தலைமையின் கீழ் இருந்து கற்ற இயற்கைக்கு எதிரான அனைத்து விடயங்களும் கட்டுப்பாடில்லாமல் வெளிப்படும் இயற்கைக்கு முற்றிலும் மாறாக செயல் பட தொடங்கும். ஒரு கட்டத்திற்கு பிறகு இயற்கை எதிர்வினையாற்றி மொத்த இனத்தையும் அழிக்கும். அப்படி என்றால் மனித இனம் தலைமையின் கீழ் இயங்கும் பொது இயற்கைக்கு எதிராக செயல்படவில்லையா என கேட்காதீர்கள். நம்மை ஆட்டுவிக்கும் தலைமை இயற்கையின் மகத்துவத்தை நம்மை விட மிக அதிகமாக உணர்ந்துவைத்துள்ளது. லட்சக்கணக்கான வருடங்களாக  அடிமைகளான நம்மை வைத்து இயற்கையை மெல்ல மெல்ல சூறையாடுகிறது. வேண்டிய இடங்களில் இயற்கையை பேணி காப்பது போல் காத்து அந்த வளத்தை எதிர்கால உற்பத்திக்கு சேமித்து வைக்கிறது. இயற்கையும் அவ்வப்போது அதற்க்கு எதிர்வினையாற்றித்தான் வருகிறது.

ஆதியில் இருந்தே தலைமையின் கீழே இல்லாமல் இருந்திருந்தால் கருத்தியலில் சிக்காமல் இருந்திருந்தால் நாமும் ஓர் இயற்கையை சார்ந்த இனமாக இருந்திருப்போம். ஆனால் தலைமையின் நச்சுற்ற எண்ணங்கள் மனிதனிடத்தில் விதைக்கப்பட்டுவிட்டதால், தலைமை இருந்தாலும் சரி வேறு தலைமை வந்தாலும் சரி மனித இனம் எந்த காலகட்டத்திலும் இயற்கைக்கு எதிராக மட்டுமே செயல்படும்.

உங்கள் ஒருவரை மட்டும் எண்ணி இந்த கருத்து தவறு தலையின் கட்டுப்பாடு இல்லை என்றால் இயற்கை செழிக்கும் மனித இனம் அதை பேணி காக்கும் என எண்ணவேண்டாம். மனித இனம் என்பது 7.7 பில்லியன் நபர்களை கொண்டது. தலைமையின் பிடியில் இருந்து விடுபட்ட சில காலங்களில்  கண்ணிமைக்கும் நேரத்தில் இயற்கை சூறையாடப்படும். அது மட்டுமில்லாது இயற்கையை காப்போம் என்று என்னும் நாமே நம்மை அறியாமல் நமது செயல் பாடுகளால் அதனை சிதைப்போம் நம் பார்வையில் அது விவசாயம், ஆநிரை மேய்த்தல், சூரிய மின்சாரம் என இயற்கையை ஒட்டிய பிரகாசமான வாழ்வியலாக தெரியும். அதன் விளைவு நாம் அறியாதது.

இது இப்படியே சுழற்சியா இயங்கும். இந்த 10 வது அந்த தலைமை கூட்டத்துக்குள்ளையே மாறிக்கிட்டே இருப்பாங்க. மக்கள் மாறி மாறி அந்த கூட்டம் உருவாக்குற கட்டமைப்புக்குள்ளையே இருக்கும். புது புது பொலிவுடன் காலத்துக்கு ஏத்தமாரி வகை வகையா விஷயங்கள் உள்ள வந்து அந்த கட்டமைப்பை தொடர்ந்து நீட்டிக்கும். எளிமையா சொல்லனும்னா சிறைச்சாலைல கைதிகளை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு அப்புறம் வேற சிறைக்கு மாத்துற மாறி தான். ஒரு சிறைல அந்த கூட்டம் இருந்தா அந்த கட்டமைப்பை உணர்ந்து அந்த கூட்டத்தில் இருந்தே 10 வது ஆள் வந்துடுவான். இத மட்டும் மேல இருக்கிறவன் எப்பவும் விடமாட்டான். 

இதை எல்லாம் உணர நமக்கு ஒன்னும் பெரிய அளவுல வரலாறு தெரியணும், உலக அரசியல் தெரியணும்னு இல்ல அந்த 10 வது ஆளோட பார்வைல இந்த சமூகத்த பாத்தா போதும். அந்த பத்தாவது ஆளா இந்த சமூகத்தை பார்த்து இந்த சுவாரசியமான விளையாட்ட ரசிப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.