16/12/2018

புரட்சி...


சில எண்ணங்களும், பொருளாதார நிலைமையும் சேர்ந்து புரட்சிகளை உண்டு பண்ணுகின்றன.

அதிகார பதவியிலிருக்கும் சில முட்டாள்கள், சில கிளர்ச்சிக்காரர்களே புரட்சிக்குக் காரணம் என்று குருட்டுத்தனமாக நம்புகிறார்கள்.

இந்தக் கிளர்ச்சிக்காரர்கள் யார்?

பொது மக்களுடைய அதிருப்தியிலிருந்தும் ஆத்திரத்திலிருந்தும் தோன்றியவர்கள்.

ஆனால் இந்தக் கிளர்ச்சிக்காரர்களுடைய வார்த்தைகளைக் கேட்டு மட்டும் மக்கள் புரட்சிக்குக் கிளம்பி விடுகிறார்கள் என்று சொல்ல முடியாது.

மக்கள் எப்போதும் தங்கள் சொந்த நலத்தினைக் கோரும் சுபாவம் உடையவர்கள்.

தாங்கள் வைத்திருப்பது சொற்பம் என்றாலும் அதனை இழந்துவிட சம்மதிக்க மாட்டார்கள்.

ஆனால் நாளுக்கு நாள் துன்பம் அதிகரித்து வாழ்க்கையே ஓர் சுமையாகி விடுகிறபோது தான் ஆபத்தை ஏற்றுக் கொள்ளக் கிளம்பி விடுகிறார்கள்.

கிளர்ச்சிக் காரர்களுடைய வார்த்தைகளைக் கேட்கிறார்கள்.

ஆனால் அடைய வேண்டிய லட்சியம் இன்னதென்று தெரியாத காரணத்தால் அநேக புரட்சிகள் தோல்வி அடைந்து போகின்றன.

ஒழுங்கான எண்ணங்களும் பொருளாதார சீர் கேடுகளும் ஒன்று சேரும் போது தான் உண்மையான புரட்சி ஏற்படும்.

இத்தகைய புரட்சி ஒரு சமுதாயத்தின் அரசியல், பொருளாதாரம், மதம் முதலிய எல்லாத் துறைகளையும் பாதிக்கிறது.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த பிரெஞ்சுப் புரட்சி இந்த மாதிரியான உண்மைப் புரட்சி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.