03/12/2018

மந்திரங்களின் சூட்சும வடிவமே கோலங்கள்...


கோலங்கள் பாகம் - 1...

கீழே இருப்பவை ஒரு உலோகதகட்டின் மீது மாவை கொட்டி குறிப்பட்ட அதிர்வுகளை செயற்கையாக உண்டாக்குவதன் மூலம்.... அதில் உண்டாகும் வடிவங்கள்.....  அது ஏறக்குறைய 99% நம்முடைய வீட்டில் போடப்படும் பழங்கால புள்ளி கோலங்களுடன் ஒத்து போவதை காணமுடிகிறது.....

அப்படியெனில் நாம் போட்ட கோலங்கள் எதற்காக?

ஒரு அதிர்வெண் குறிப்பிட்ட வடிவத்தை உருவாக்க முடிகிறது எனில் ஒரு வடிவம் குறிப்பிட்ட அதிர்வை உண்டாக்கும் அல்லவா?

அதே தான்..... இதற்கு பெயர் பின்னோக்கிய செயல்பாடு.....

இதன் அடிப்படையில் பார்த்தால் உலகத்தில் வடிவம் எடுத்த ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அதிர்வெண் உண்டு..... நம்முடைய நினைவுகளுக்கும் ஒரு அதிர்வெண் உண்டு.....

உங்களை சுற்றி ஒரு குறிப்பிட்ட அதிர்வுகளை உண்டாக்கினால் உங்கள் உடலும் நினைவும் அந்த அதிர்வெண்ணை கிரகித்து அதற்கேற்றால் போல் செயல்பட ஆரம்பிக்கும்.... மேலும் ஒருவரின் நினைவை கட்டுப்படுத்தவும் அதிர்வுகளால் முடியும்.....

அதிர்வுகளை கொடுக்க முடியாத இடத்தில் வடிவங்களை வைத்து உருவாக்கும் முடியும்..... மனித உடலால் உணர முடியாத அதிர்வுகள் அதிகம் உண்டு அதே அதிர்வுகளின் வடிவங்களை பயண்படுத்தும் போதும் அதுவெளிப்படுத்தும் அதிர்வுகளை உணரமுடியாது..... இது ஆதிகாலம் தொட்டே உபயோகப் படுத்தப்பட்டுள்ளது....

இதை முதலில் உபயோகப்படுத்தியது யார் தெரியுமா?

வேறு யார்?  நம் தமிழர்கள் தான்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.