06/05/2017

ஆகாயத்தில் ஒரு ஒளி - 60...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தில் இன்று நாம் தெரிந்துகொள்ளும் தீர்க்க தரிசனப் பகுதி 60-ம் பகுதியாகும்.

மக்கள் வாழ வேண்டும், அவர்கள் வாழும் இந்த சமூகம் இறை உண்மைகளை உணர்ந்து அறிய வேண்டும். கர்ம வினைகளை அனுபவிக்கும் மனிதனுக்கு கடவுள் சார்ந்த விஷயங்களை மட்டும் ஏனோ நம்புவதில்லை. இனி மக்கள் வழிபாடு செய்யும் இடங்களில் பல சோகச் சம்பவங்கள் நிகழக்கூடும் என்றும், அச்சமயத்தில் பல புதுமைகளை பல ஆன்மீக குருமார்கள் தாங்களாகவே முன் வந்து செய்வார்கள் என்றும், இது கடவுளின் செயல் என்பதுபோல் பறைசாற்றுவார்கள் என்று ஒரு கோட்பாடு தெரிவிப்பதாக 60-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.

மக்கள் கடவுளை ஏற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும் பல சோகச் சம்பவங்கள் இப்பூமியில் அனேக இடங்களில் நடக்க உள்ளதாகவும், அச்சமயத்தில் வேறு ஒரு சமூக அமைப்பு, அதாவது ஒரு மத அமைப்பு தாங்கள் தான் கடவுளின் தூதுவர்கள் என்று பல அறிக்கைகளை வெளியிட்டு மக்கள் சமூகத்தை குழப்பமடையச் செய்வார்கள் என்று 60-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.


அன்னை ஆதிசக்தியானவர் இப்பூமியில் கால் ஊன்றும்  இச்சமயத்தில் ஒரு மகா சம்பவம் வான் மண்டலத்தில் ஒரு பேரொளியாக வெளிப்பட்டு மக்கள் காணும்படி செய்யும் என்றும், இதன் பின்னர் மக்கள் கூட்டம் கூட்டமாக ஒரு இடத்தை நோக்கி ஓடுவார்கள் என்று 59-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை இங்கு வெளிப்படுத்துகின்றது.

இந்த பூமியெங்கும் சத்திய யுகத்தின் நல்லாட்சி துவங்கும் வசந்தகாலம் வந்துவிட்டது என்றும், 66-ம் தீர்க்க தரிசனம் வெளியிட்ட 30-வது நாள் இப்பூமியில் அன்னையின் அரிச்சுவடுகளை மக்கள் சமூகம் அறியவும், காணவும் செய்வார்கள் என்று 60-வது தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.


உலகம் போற்றும் அகில உலகத்தாய் அன்னை ஆதிபராசக்தியின் அவதாரப் பெருவிழாவை உலகமே கொண்டாடும் திருநாள் விரைவில் இப்பூமியில் அறிவிக்கப்பட உள்ளது என்றும், அன்னையின் செய்திகளை இந்திய யோக அமைப்பு ஒன்று பகிரங்கமாக வெளியிடும் என்றும், இனி அந்த யோக அமைப்பு அன்னையின் அனைத்து அவதாரச் செய்திகளையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் என்று 60-வது தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

மக்கள் இனி இறை அவதாரத்தை காண உள்ளதாகவும், அதற்குமுன் அனைத்து மதத்திலும் இச்செய்தி தீர்க்க தரிசனமாக வெளிப்படுத்தப்படும் என்றும், அனைத்து மதத்தினரும் ஒன்றிணையும் விதமாக இறைவன் அவதாரம் மேற்கொள்ளும் சம்பவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் என்றும்,  இந்தியா இனி இறைவனின் தேசமாக விளங்கிட உள்ளதாக 60-ம் தீர்க்க தரிசனம் மெய்பட ஒரு குறிப்பை தருகின்றது.


மக்கள் இனி நிம்மதியாக நீதி, நேர்மையுடன் நடமாட துவங்குவார்கள் என்றும், அழிந்த பூமியின் பகுதிகள் மீண்டும் மக்களாலே புதுப்பிக்கப்பட உள்ளதாகவும், அதற்குமுன் நிகழும் அனைத்து சோகச் சம்பவங்களும் ஏற்கனவே இறைவன் எடுத்த முடிவின்படியே நடந்து முடியும் என்று 60-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


இந்த புண்ணிய பூமியான இந்திய தேசத்தின் மண்ணில் அவதாரம் மேற்கொள்ள உள்ள அன்னை ஆதிசக்தியின் அவதாரக்கோலத்தை காண வான் மண்டலத்தில் உள்ள பிற கிரகங்களிலிருந்து மனிதர்களை போன்ற அயல்கிரகவாசிகளும் இப்பூமியை நோக்கி வர உள்ளார்கள் என்றும், இதனால் பூமிக்கும், பிற கோள்களுக்கும் வான்மார்க்க பயணம் எளிதாகி விடும் என்றும்,  இதன் சாதனையை இந்திய தேசமே எளிதாக்கும் என்று 60-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

மக்கள் தங்களுடைய இல்லங்கள் தோறும் அன்னை ஆதிசக்தியை வரவேற்க காத்திருப்பார்கள் என்றும், இந்திய நாடு ஒரு ஆன்மீக சொர்க்க பூமியாக விளங்கிடப் போவதாக 60-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது. இந்திய தேசத்தின் அனைத்து நதிகளும் ஒன்றிணைக்கும் செயல் அப்பொழுது உருவாகி விடும் என்றும், மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து இத்திட்டத்தை விரைந்து முடிப்பார்கள் என்றும், இதனால் இந்திய தேசத்தின் அனைத்து மாநிலங்களும் மிகுந்த வளமையோடு விளங்கும் என்று 60-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு விளக்கத்தை இங்கு தருகின்றது.


மக்கள் தேசமாக உள்ள இந்திய நாடு இனி ஆதிசக்தியின் அருளால் நிரப்பபடும் என்றும், அன்னை ஆதிசக்தி இந்திய தேசத்தில் உருவாகும் பேராலயத்திலேயே கடவுளின் அம்சமாக குடிபுகுவாள் என்றும், அன்னை உள்ள அவ்விடத்தை நோக்கி உலக நாட்டு மக்கள் புனித பயணத்தை மேற்கொள்வார்கள் என்றும், அவர்கள் மட்டுமின்றி பிற கிரகவாசிகளும் புனித பயணத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் மகா அதிசயம் இவ்வுலகில் கூடிய விரைவில் நடக்க உள்ளதாக 60-ம் தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய இறை குறிப்பை தெரிவிக்கின்றது.

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட் டவெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.